Thursday 14 December 2017

துளசி - மருத்துவ குணங்கள்



வைரஸ் காய்ச்சல் மூளை காய்ச்சலுக்கு அற்புதமான மருந்து இந்த துளசி,  துளசி இலைக்கு நரம்பு கோளாறு, மன இறுக்கம், ஞாபக சக்தி குறைவு, ஆஸ்துமா, இருமல் மற்றும்  தொண்டை நோய்களை குணமாக்குகிறது. 

தோல் சுருக்கம், பார்வை கோளாறுகள் நீங்கிட துளசி அற்புதமான மருந்து என்று சித்த மருத்துவம் கூறுகிறது. வெட்டுக் காயங்களுக்குத் துளசி இலை சாற்றை பூசி வந்தால் அவை விரைவில் குணமடையும். 

குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் வாழ்நாள் முழுவதும் வராமல் தடுக்க தினமும் துளசி இலைகளை தின்று வந்தால் போதும். அற்புதமான ஜீரண சக்தியும் புத்துணர்ச்சியும் துளசி இலைகளை சாப்பிடுவதன் மூலம் பெறலாம். 


துளசி இலையை காய்ச்சலுக்கு மருந்தாக பயன்படுத்தும் முறை:
பத்து துளசி இலைகளுடன் ஐந்து மிளகை நசுக்கி இரண்டு டம்ளர் நீர் விட்டு அதை அரை டம்ளராகும் வரை கொதிக்க வைத்து ஆறிய பின் அந்த நீரை குடிக்கவும், பின்பு சிறிது எலுமிச்சை சாறை அருந்தினால் எந்த வகை காய்ச்சலாய் இருந்தாலும் அது சிறிது சிறிதாக குணமாகி விடும் என்கிறது சித்த மருத்துவம். மேலும், துளசி நீரை ஒரு மண்டலம் (48 நாட்கள்) தொடர்ந்து பருகினால் 448 வகை நோய்கள் குணமாகும் என்று சித்த மருத்துவம் கூறுகிறது. 

தோல் நோய்கள் நீங்கிட:
துளசி இலைகளை எலுமிச்சைச்சாறு விட்டு நன்கு மை போல அரைத்து அந்த விழுதைத் தோலில் தடவி வந்தால் நாள்பட்ட சொறி, படை  சிரங்குகள் காணாமல் போய் விடும்.

பேன், பொடுகு நீங்க:
துளசி சாற்றுடன் எலுமிச்சசை சாறு கலந்து வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து குளித்து வந்தால் பேன், பொடுகு தொல்லை நீங்கும்.

வாய் துர்நாற்றம் நீங்க:
வாய் துர்நாற்றத்தைப்  போக்கி, நமது உடலுக்கான சிறந்த கிருமிநாசினியாக துளசி விளங்குகிறது. துளசி இலையைப் போட்டு ஊறவைத்த நீரைத் தொடர்ந்து பருகி வந்தால் சர்க்கரை நோய் நம்மை அண்டாது.

வியர்வை நாற்றம் நீங்க:
வியர்வை நாற்றத்தை  தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே  கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் உடல் துர்நாற்றம் நீங்கி உடல் மணக்கும்.

துளசி நீர்:
ஒரு சுத்தமான செம்பு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் விட்டு ஒரு கைப்பிடி அளவு துளசி இலைகளை போட்டு அந்த பாத்திரத்தை எட்டு மணி நேரம் மூடி வைக்கவும், பின்னர் அந்த துளசி நீரை வெறும் வயிற்றில் குடித்து வர சிறுநீரகங்களில் சேரும் நச்சுக்கழிவுகளை அகற்றி தூய்மையாக்குகிறது, இந்த துளசி பானத்தை தினமும் குடித்து வந்தால் நரம்புகள் அமைதியடைந்து மூளையில் இரத்த ஓட்டம் சீரடைகிறது, இதனால் மன அழுத்தமும் குறைகிறது.  இந்த துளசி நீரை ஒரு மண்டலம் அருந்தி வர ரத்தத்தில் உள்ள தேவையற்ற வேதி பொருட்கள், விஷ நீர்கள் சிறுநீர் வழியாக வெளியேறி விடுகிறது, இதனால் இரத்தம் சுத்தமாகிறது.