Friday 26 January 2018

பப்பாளி பழத்தின் மருத்துவ பயன்கள்



ல்லா காலங்களிலும் கிடைக்கும் பப்பாளியில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. நூறு கிராம் பப்பாளியில் 39 கலோரிகள், 5.90 கிராம் சர்க்கரை, 9.81 கிராம் கார்போஹைட்ரேட், 1.8 கிராம் டயட்டரி நார்ச்சத்து, 0.14 கிராம் கொழுப்பு, 0.61 கிராம் புரோட்டீன், 328 மைக்ரோகிராம் வைட்டமின் ஏ, 0.04 mg வைட்டமின், 0.05 mg வைட்டமின் பி2, 0.338 mg வைட்டமின் பி3, 0.1 mg வைட்டமின் பி6, 38 mg வைட்டமின் பி9, 61.8 mg வைட்டமின் சி, 24 mg கால்சியம், 0.10 mg இரும்புச்சத்து, 10 mg மக்னீசியம், 5 mg பாஸ்பரஸ், 257 mg பொட்டாசியம், 3 mg சோடியம் நிறைந்துள்ளது. பப்பாளியில் சாச்சுரேட்டட் கொழுப்புக்கள், மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள், பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள், ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் ஒமேகா-6 ஃபேட்டி ஆசிட், ஜிங்க், காப்பர், மாங்கனீசு, செலினியம் போன்றவையும் நிறைந்துள்ளன. இவ்வளவு சத்துக்களைத் தன்னுள் கொண்டுள்ள பப்பாளியை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் காணொளி காட்சி தொகுப்பாக: 



------------------------------------
முந்தைய பதிவுகள்
------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
----------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Friday 19 January 2018

முடக்கத்தான் கீரை மருத்துவ குணங்கள்


வீட்டு தோட்டங்களில் எளிதாக வளரக்கூடிய கொடியாக படர்ந்து வளரும் முடக்கத்தான் கீரை செடியின் மருத்துவ குணங்கள்

மூட்டு வலி போக்கும் முடக்கத்தான் கீரை

முடக்கத்தான் கீரை தோசை: 
மூட்டு வலியால் அவதிப்படுபவர்கள் ஒரு கைப்பிடி முடக்கத்தான் கீரையை, 1/2 டீஸ்பூன் சீரகம், 1 பச்சைமிளகாய் சேர்த்து அரைத்து அதை ஒரு கப் இட்லி மாவுடன் கலந்து தோசையாக ஊற்றி சாப்பிட்டு வர மூட்டு வலி பறந்து போகும்.

முடக்கத்தான் கீரை துவையல்:
வாணலியில் எண்ணெய் விட்டு இரண்டு வர மிளகாயுடன் ஒரு டீஸ்பூன் வெள்ளை உளுத்தம்பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைக்கவும், 1/4 கப் முடக்கத்தான் கீரையை எண்ணெய் விட்டு வதக்கி கொள்ளவும், சிறிது புளியை நூறு கிராம் தேங்காய் துருவலுடன் சேர்த்து வறுத்து கொள்ளவும். வறுத்து வைத்த எல்லா எல்லா பொருட்களையும் சேர்த்து சிறிது உப்பு சேர்த்து அரைத்து எடுத்தால் முடக்கத்தான் கீரை துவையல் தயார். 

சளி இருமலை விரட்டும் முடக்கத்தான் கீரை சூப்:
ஐந்து மிளகுடன் 1/2 டீஸ்பூன் சீரகம் சேர்த்து அரைத்து கொள்ளவும், அதனுடன் இரண்டு பல் பூண்டு சேர்த்து அரைத்து கொள்ளவும். வாணலியில் 1/2  டீஸ்பூன் நெய் விட்டு சூடானவுடன் அரைத்து வைத்திருக்கும் மிளகு, சீரகம், பூண்டு விழுதை மிதமான சூட்டில் வதக்கி கொள்ளவும். இதில் 1/2 கப் முடக்கத்தான் கீரையை சேர்த்து வதக்கவும், நன்கு வதங்கியவுடன் இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு கீரையை வேக விடவும், பாதி வெந்த நிலையில் தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும். கீரை நன்கு நன்கு வெந்தவுடன் அடுப்பிலிருந்து எடுத்து சிறிது நேரம் ஆற விடவும். ஆறிய பின்னர் பருப்பு மசிக்கும் மத்து கொண்டு கடைந்து பின்னர் வடிகட்டி எடுத்தால் சுவையான முடக்கத்தான் கீரை சூப் தயார். இந்த சூப் குழந்தைகளுக்கு வரும் சளி, இருமல் தொந்தரவை விரட்டும். 

பொடுகு போக்கும் முடக்கத்தான் கீரை:
ஒரு கட்டு முடக்கத்தான் கீரையை ஒரு லிட்டர்  தண்ணீரில் கொதிக்க வைத்து, ஆரிய பின்னர் அந்த நீரை கொண்டு தலை குளிப்பதற்கு முன்பு தலை முடியை நன்கு  அலசி விட்டு குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும். முடக்கத்தான் கீரையை நல்லெண்ணெய்யுடன் சேர்த்து கொதிக்க வைத்து பின்னர்  ஆற வைத்து எடுத்து கொள்ளவும். அந்த எண்ணெயை குளிப்பதற்கு முன் தலைக்கு தேய்த்து குளித்து வர பொடுகு தொல்லை நீங்கும். 

மூட்டு வலி போக்கும் முடக்கத்தான் கீரை ஒத்தடம்:
முடக்கத்தான் கீரையை ஆமணக்கு எண்ணெயில் லேசான சூட்டில் சூடாக்கி அந்த சூடான இலைகளை ஒரு வெள்ளை துணியில் எடுத்து கட்டி கொண்டு அதை கொண்டு வலி இருக்குமிடத்தில் ஒத்தடம் கொடுக்க மூட்டு வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கும். 
------------------------------------
முந்தைய பதிவுகள்
------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
----------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Friday 12 January 2018

இதயம் காக்கும் எலுமிச்சம்பழ சாறு - மருத்துவ பயன்கள்



ஹெல்த் டைம்ஸில் இந்த வாரம் எலுமிச்சம்பழத்தின் மருத்துவ பயன்களையும் எலுமிச்சம்பழ சாறுடன்   தேன், வெள்ளரிக்காய், புதினா, இஞ்சி சாறு  சேர்த்து உட்கொள்ளும் போது கிடைக்கும் மருத்துவ பயன்களையும் தொகுத்து காணொளி காட்சி வடிவில் கொடுத்துள்ளோம்  , காணொளி காட்சி பிடித்திருந்தால் ஹெல்த்  டைம்ஸ் யூ டியுப் சானல் சப்ஸ்கிரைப் செய்யுங்கள், லைக் செய்யுங்கள்,  உங்கள் நண்பர்களுக்கு சமூக ஊடகங்கள் மூலம் ஹெல்த்  டைம்ஸ் யூ டியுப் சானலை  பகிரவும் தவறாதீர்கள். 


------------------------------------
முந்தைய பதிவுகள்
------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
----------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Friday 5 January 2018

ஜலதோஷம் போக்கும் கற்பூரவல்லி இலைகள்


வீட்டு தோட்டங்களில் எளிதாக வளரகூடிய கற்பூரவல்லி செடியும் இலைகள், ஜலதோஷம், தலைவலி போக்கும் அற்புதமான மூலிகையாக விளங்குகிறது, லேசான காரச்சுவையுடன் இருக்கும் கற்பூரவல்லி இலைகளை துளசி இலை போல மென்று சாப்பிடலாம், இந்த இலையின் மருத்துவ பயன்களை கீழே பார்க்கலாம்:

ஜலதோஷம், இருமல் போக்கும் கற்பூரவல்லி இலைச்சாறு:
குழந்தைகளுக்கு குளிர் காலங்களில் வரும் ஜலதோஷம், இருமல் நீங்க கற்பூரவல்லி இலைச்சாறு எடுத்து (சாறில் 1 அல்லது 2 டீஸ்பூன் வெந்நீர் சேர்க்கலாம்) சிறிது தேனுடன் சேர்த்து 

கொடுத்தால் ஜலதோஷம், இருமல் இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும். (தேனுக்கு பதில் சர்க்கரை சேர்க்க வேண்டாம் அது இருமலை இன்னும் அதிகபடுத்தி விடும்)

கற்பூரவல்லி இலைகளை நன்கு கொதிக்கும் தண்ணீரில் போட்டு அதிலிருந்து வரும் ஆவியை உள்ளுக்கு இழுத்தால் நீண்ட நாள் நெஞ்சு சளி தொல்லை நீங்கும், குழந்தைகளுக்கு கற்பூரவல்லி இலைச்சாறு எடுத்து நெஞ்சில் தடவினால் சளித்தொல்லை நீங்கும்.

தலைவலி நிவாரணி:
தலைவலி போக்கும் மிகசிறந்த தலைவலி நிவாரணியாக கற்பூரவல்லி இலை விளங்குகிறது. தலைவலி வரும்போது கற்பூரவல்லி இலைச்சாறை நெற்றியில் தடவ தலைவலி நீங்கும்.

இயற்கை கொசுவிரட்டி:
கற்பூரவல்லி இலைச்சாறை உடலில் தேய்த்து கொண்டு படுத்தால் கொசுத்தொல்லை இல்லாமல் நிம்மதியாக உறங்கலாம். குளிர்காலங்களில், இந்த இலைகளை எண்ணெய் குளியலின் போது எண்ணையோடு சேர்த்து குளிக்கும்போது பயன்படுத்துவதால் ஜலதோஷம், இருமல் வராமல் தடுக்கும். 

மேலும் கற்பூரவல்லி இலைகள் ஆஸ்துமா, தோல் நோய்கள், செரிமான கோளாறுகள், வாய்புண்கள் நீங்க மருந்தாக பயன்படுகிறது. 
------------------------------------
முந்தைய பதிவுகள்
------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்