Friday 29 December 2017

பித்தம் போக்கும் கொத்தமல்லி இலை மருத்துவ பயன்கள்

ங்கிலத்தில் Coriander leaves என்று  அழைக்கப்படும் சிறு தாவர குடும்பத்தை சேர்ந்த கொத்தமல்லியை மருத்துவ குணம் வாய்ந்த ஒரு மூலிகை தாவரமாக விளங்குகிறது.   கொத்தமல்லியின் விதையை தனியா என்று அழைக்கப்படுகிறது (coriander seeds). கொத்தமல்லி விதையை காயவைத்து அரைத்து பொடியாக்கி தனியா பொடியாகவும் பயன்படுத்தபடுகிறது. சாம்பார், ரசம் இவற்றில் தழையாக பயன்படுத்தப்படும் வாசனை மிகுந்த கீரையாக கொத்தமல்லி தளை விளங்குகிறது. வாசனை பொருளாக சமையலில் சேர்க்கப்படும் கொத்தமல்லி தளை, இரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்ட மிக சிறந்த இயற்கை மருந்தாகும். கொத்தமல்லியின்  இலை, தண்டு மற்றும் வேர் மருத்தவ குணம் கொண்டவை ஆகும். கொத்தமல்லி தளையுடன் மிளகு, புளி, உப்பு சேர்த்து அரைத்து துவையலாக உண்ணலாம். பித்தம், வாந்தி இரத்த அழுத்த நோய் போன்றவற்றை கட்டுப்படுத்தும் கொத்தமல்லி தளையில் வைட்டமின் ஏ, பி, பி1, சி, சுண்ணாம்பு சத்து 
மற்றும் இரும்புச் சத்துக்களும் அதிகம் உள்ளது. சுண்ணாம்புச் சத்து எலும்புகளை வலுவாக்குகிறது, இரும்புச் சத்து அதிகம் இருப்பதால் மூளையை பலப்படுத்தும். 

கொழுப்பை குறைத்து, இரத்த அழுத்தத்தை சீராக்கும்: 
சிறிதளவு சீரகத்தை கொத்தமல்லி சாற்றில் ஊற வைத்து பிறகு அதை காய வைத்து பொடியாக்கி தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் சாப்பிட்டு வர உடலில் உள்ள கொழுப்பு குறைவதுடன் இரத்த அழுத்தமும் சீராக்கும்.

நீரிழிவு நோய் குணமாக:
நீரிழிவு நோய் குணமாக்க தயாரிக்கப்படும் மருந்துகளில் முக்கியமான உட்பொருளாக கொத்தமல்லி விளங்குகிறது. கொத்தமல்லி தளை சர்க்கரை அளவை கட்டுபடுத்தும் மிக சிறந்த மூலிகையாக விளங்குகிறது.

அஜீரண கோளாறுகள் நீங்கிட:
கொத்தமல்லி தளையை துவையலாக, சட்னியாக உணவில் சேர்த்துகொண்டால் அது பசியை தூண்டுவதுடன் அஜீரண கோளாறுகளையும் குனமாக்குகிறது. உடலில் உள்ள நச்சுக்கழிவுகளை அகற்றும் சிறந்த கிருமி நாசினியாக கொத்தமல்லி விளங்குகிறது. அசுத்த வாயுக்கள் உடலிலிருந்து வெளியேற்றி வாய்வு தொந்தரவுகளிலிருந்து காக்கிறது. சிறுநீரகக் கோளாறு  போக்கும் வல்லமை உடையது.

கொத்தமல்லி சட்னி செய்முறை காணொளி காட்சி 


முகம் பொலிவு பெற:
கொத்தமல்லி தளை முகத்தில் வரும் முகப்பரு, கரும்புள்ளிகள் போன்றவற்றை குணப்படுத்தி முகம் பொலிவு பெற உதவுகிறது மேலும் தோலில் ஏற்படும் அலர்ஜி, அரிப்பு, எரிச்சல் உட்பட பல தோல் நோய்களுக்கு மருந்தாக விளங்குகிறது.    

பார்வை குறைபாடுகள் போக்கும்:  
கொத்தமல்லி தளையை உணவாக தொடர்ந்து பயன்படுத்தி வர பார்வை குறைபாடுகள் நீங்குகிறது.  

வாய்புண்கள் குணமாக:
உடல் சூட்டை குறைக்கும் குளிர்ந்த தன்மையுள்ள கொத்தமல்லி தளையை மைய அரைத்து அதை வாய்புண்களில் பற்று போட்டால் உடல் சூடு காரணமாக ஏற்படும் வாய்புண்கள் குணமாகிறது.  

பெண்களுக்கு மாதவிலக்கு பிரச்சினைகள் குணமாக:  
கொத்தமல்லி சாற்றில் கருஞ்சீரகத்தை ஊற வைத்து பின்பு காய வைத்து பொட்டியாக்கி தினமும் ஒரு கிராம் அளவு தேனில் குழைத்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு பிரச்சினைகள் குணமாகும்.

கொத்தமல்லி  மருத்துவ குணங்கள் விளக்கும் காணொளி காட்சி 

------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்