Thursday 16 November 2017

பூண்டு மருத்துவ குணங்கள்



நாம் அன்றாடம் சமைக்கும் சமையலில் இடம்பெறும் பூண்டின் மருத்துவ குணங்களை இன்று நாம் தெரிந்து கொள்ளலாம். தினமும் உணவில் பூண்டு சேர்த்து வந்தால் இருமல், காய்ச்சல் போன்ற நோய்கள் அண்டுவதில்லை.  வெங்காய குடும்ப வகையை சேர்ந்த, இயற்கையாக கிடைக்கும் இந்த பூண்டு, நமக்கு தரும் மருத்துவ பயன்கள் அளவிட முடியாதவை. பூண்டு அதிக அளவில் விளைவது சீனாவில் தான், பூண்டு உற்பத்தியில் சீனாவுக்கு அடுத்த இடத்தில இந்தியா உள்ளது. 

பூண்டில் உள்ள அலிசின் என்ற ஆன்டிஆக்சிடண்ட் சத்து, நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. வாய்வு கோளாறு, அஜீரண கோளாறுகளை நீக்குவதில் பூண்டுக்கு இணையான வேறு மருந்தில்லை பூண்டை உணவில் தொடர்ந்து பயன்படுத்துபவர்களுக்கு இரத்த அழுத்த நோய் வருவதில்லை. தொண்டை கரகரப்பு, பல் வலி போன்றவை நீங்க பூண்டு மிக சிறந்த மருந்தாகும். நம் உடலில் உள்ள இரத்தக் குழாய்களில் படிந்திருக்கும் தேவையற்ற கெட்ட கொழுப்பை அகற்றி, சீரான இரத்த ஓட்டம் தந்து, மாரடைப்பில் இருந்து நம்மை காப்பதில் பூண்டு பெரும் பங்கு வகிக்கிறது. 

இவ்வளவு மருத்துவ குணங்கள் கொண்ட பூண்டை பச்சையாக சாப்பிடுவது நல்லது, ஆனால் பூண்டு சாப்பிட்டால் வரும் வாசம் காரணமாக பலர் பூண்டை பச்சையாக சாப்பிடுவதில்லை. பூண்டை பச்சையாக சாப்பிட்டு விட்டு பின்பு சிறிது புதினா இலைகளை மென்று தின்றால் பூண்டு வாசம் போய் விடும். 

பூண்டு பால்:
காச நோயினால் அவதிபடுபவர்கள் ஒரு டம்ளர் பாலில், ஒரு முழுப்பூண்டின் உரித்த பற்கள், பத்து மிளகு, சிறிது மஞ்சள் தூள், இவற்றுடன் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து இந்த கலவையை  அடுப்பில் வைத்து ஒரு டம்ளராக வரும் வரை காய்ச்சி எடுத்து குடித்து வர சளி, இருமல் நீங்கும். நோய் குணமானவுடன் பூண்டு பால் குடிப்பதை நிறுத்தி விட வேண்டும். 

பூண்டின் மருத்துவ குணங்கள் விளக்கும் காணொளி காட்சி