Monday, 19 August 2019

பன்றியின் இதயத்தை மனிதனுக்கு வைக்கும் இதய மாற்று அறுவை சிகிச்சை புரட்சி


இங்கிலாந்தை சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர் இதய மாற்று அறுவை சிகிச்சையில் பன்றியின் இதயத்தை மனிதனுக்கு வைக்கும் ஆராய்ச்சியில் இறங்கியுள்ளார். இந்த ஆராய்ச்சி வெற்றியடையும் பட்சத்தில் இன்னும் மூன்று ஆண்டுகளில் பன்றியின் இதயத்தை இதய மாற்று அறுவை சிகிச்சை மூலம் இதயம் பழுதடைந்த மனிதனுக்கு வைத்து மனிதனின் ஆயுள் காலத்தை நீடிக்க முடியும். 

இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டு வரும் ஓய்வு பெற்ற இதய அறுவை சிகிச்சை நிபுணரான சர் டெரன்ஸ் இங்கிலிஷ்   (87 வயது)  1979ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், பிரிட்டனில் வெற்றிகரமாக முதல் இதய மாற்று அறுவை சிகிச்சையை செய்த பெருமைக்குரியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது பன்றியின் சிறுநீரகத்தை மனிதனின் பழுதடைந்த சிறுநீரகத்திற்கு பதிலாக வைக்கும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை ஆராய்ச்சியை நடத்தி வரும் இவர் இந்த  ஆராய்ச்சி வெற்றியடைந்தால் இதே முறையில் பன்றியின் இதயத்தை மனிதனுக்கு வைக்கும் இதய மாற்று அறுவை சிகிச்சையும் வெற்றியடையும் என்று கருதுகிறார். இவர் கடந்த நாற்பது வருடங்களாக வெற்றிகரமான இதய மாற்று அறுவை சிகிச்சை நிபுணராக உள்ளார். 

இதய மாற்று அறுவை சிகிச்சையில் பெரும் புரட்சியை எற்படுத்தக்கூடிய இவருடைய ஆராய்ச்சி வெற்றியடையும் பட்சத்தில் இதயம் சம்பந்தப்பட்ட பல்வேறு நோய்களுக்கு தீர்வு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. 

இங்கிலாந்து நாட்டில் மட்டும் இதய மாற்று அறுவை சிகிச்சையில் - மாற்று இதயத்துக்காக 280 நோயாளிகள் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். இந்த ஆராய்ச்சியின் மூலம் பழுதடைந்த இதயங்களால் இருண்டு கிடக்கும் அவர்களின் வாழ்க்கையில் ஒரு விடிவுகாலம் வரும் என்று நம்பப்படுகிறது.  
------------------------------------
முந்தைய பதிவுகள்
------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
----------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Saturday, 28 April 2018

வெயில் காலத்தில் உடல் சூட்டை தணிக்கும் இயற்கை வழிமுறைகள்


வெயில் காலத்தில் உடல் சூட்டை தணிக்கும் இயற்கை வழிமுறைகள் காணொளி காட்சி வடிவில், காணொளி காட்சி பிடித்திருந்தால் ஹெல்த் டைம்ஸ் யூ டியுப் சானல் சப்ஸ்கிரைப் செய்யுங்கள், லைக் செய்யுங்கள்,  உங்கள் நண்பர்களுக்கு சமூக ஊடகங்கள் மூலம் ஹெல்த் டைம்ஸ் யூ டியுப் சானலை  பகிரவும் தவறாதீர்கள். 

------------------------------------
முந்தைய பதிவுகள்
------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
----------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Friday, 30 March 2018

வெண்டைக்காய் மருத்துவ பயன்கள்


காய்கறி சந்தைகளில் மலிவாக கிடைக்கும் காய்கறியான வெண்டைக்காயின் மருத்துவ பயன்கள் காணொளி காட்சி வடிவில், காணொளி காட்சி பிடித்திருந்தால் ஹெல்த் டைம்ஸ் யூ டியுப் சானல் சப்ஸ்கிரைப் செய்யுங்கள், லைக் செய்யுங்கள்,  உங்கள் நண்பர்களுக்கு சமூக ஊடகங்கள் மூலம் ஹெல்த் டைம்ஸ் யூ டியுப் சானலை  பகிரவும் தவறாதீர்கள்.

------------------------------------
முந்தைய பதிவுகள்
------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
----------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Friday, 23 March 2018

வாழைப்பழம் - மருத்துவ பயன்கள்


தினமும் வாழைப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் உடலுக்கு கிடைக்கும் நன்மைகளை காணொளி காட்சி வடிவில், காணொளி காட்சி பிடித்திருந்தால் ஹெல்த் டைம்ஸ் யூ டியுப் சானல் சப்ஸ்கிரைப் செய்யுங்கள், லைக் செய்யுங்கள்,  உங்கள் நண்பர்களுக்கு சமூக ஊடகங்கள் மூலம் ஹெல்த் டைம்ஸ் யூ டியுப் சானலை பகிரவும் தவறாதீர்கள். 

------------------------------------
முந்தைய பதிவுகள்
------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
----------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Friday, 16 March 2018

அரை கீரை மருத்துவ பயன்கள்


இந்திய சமையல் வகைகளில் கீரைகளுக்கு என்று தனி இடம் உண்டு, அரைக்கீரை  தென் இந்தியாவில் அதிகமாக வளரும் கீரை வகை ஆகும். சந்தைகளில் எளிதாக குறைந்த விலைக்கு கிடைக்க கூடிய அரைக்கீரையின் மருத்துவ பயன்கள்- காணொளி காட்சி வடிவில், காணொளி காட்சி பிடித்திருந்தால் ஹெல்த் டைம்ஸ் யூ டியுப் சானல் சப்ஸ்கிரைப் செய்யுங்கள், லைக் செய்யுங்கள்,  உங்கள் நண்பர்களுக்கு சமூக ஊடகங்கள் மூலம் ஹெல்த் டைம்ஸ் யூ டியுப் சானலை  பகிரவும் தவறாதீர்கள். 

------------------------------------
முந்தைய பதிவுகள்
------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
----------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Thursday, 22 February 2018

கீழா நெல்லி – மருத்துவ பயன்கள்


வீட்டு தோட்டங்களில் எளிதாக வளரக்கூடிய கீழா நெல்லி செடியின் எல்லா பகுதிகளும் (இலை, தண்டு, வேர்) மருத்துவத்தில் பயன்படுகின்றது. பொட்டாசியம் சத்து அதிகமாக உள்ள கீழா நெல்லி இலைகளில் கசப்புச் சுவை கொண்ட பில்லாந்தின் என்கிற செயல்படும் மூலப் பொருள் உள்ளது. எராளமான மருத்துவ குணங்கள் கொண்ட கீழாநெல்லி ஒரு கற்ப மூலிகை ஆகும்.  செய்தி காணொளி கட்சி வடிவில், காணொளி காட்சி பிடித்திருந்தால் ஹெல்த் டைம்ஸ் யூ டியுப் சானல் சப்ஸ்கிரைப் செய்யுங்கள், லைக் செய்யுங்கள்,  உங்கள் நண்பர்களுக்கு சமூக ஊடகங்கள் மூலம் ஹெல்த் டைம்ஸ் யூ டியுப் சானலை  பகிரவும் தவறாதீர்கள். 



------------------------------------
முந்தைய பதிவுகள்
------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
----------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Friday, 9 February 2018

தேனின் மருத்துவ பயன்கள்


தேனின் மருத்துவ குணங்கள் காணொளி காட்சி வடிவில், காணொளி காட்சி பிடித்திருந்தால் ஹெல்த் டைம்ஸ் யூ டியுப் சானல் சப்ஸ்கிரைப் செய்யுங்கள், லைக் செய்யுங்கள்,  உங்கள் நண்பர்களுக்கு சமூக ஊடகங்கள் மூலம் ஹெல்த் டைம்ஸ் யூ டியுப் சானலை  பகிரவும் தவறாதீர்கள்.  


------------------------------------
முந்தைய பதிவுகள்
------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
----------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Friday, 2 February 2018

தூதுவளை - மருத்துவ பயன்கள் - தூதுவளை துவையல் சமையல் குறிப்பு



வீட்டு தோட்டங்களில் எளிதில் வளர்க்க கூடிய தூதுவளை கீரை சளியை விரட்டும் மிக சிறந்த மூலிகையாக விளங்குகிறது. தூதுவளையின் மருத்துவ பயன்கள் காணொளி காட்சி வடிவில், தூதுவளை துவையல் சமையல் குறிப்புடன் தொகுக்கப்பட்டுள்ளது,  காணொளி காட்சி பிடித்திருந்தால் ஹெல்த் டைம்ஸ் யூ டியுப் சானல் சப்ஸ்கிரைப் செய்யுங்கள், லைக் செய்யுங்கள்,  உங்கள் நண்பர்களுக்கு சமூக ஊடகங்கள் மூலம் ஹெல்த் டைம்ஸ் யூ டியுப் சானலை  பகிரவும் தவறாதீர்கள். 


------------------------------------
முந்தைய பதிவுகள்
------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
----------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Friday, 26 January 2018

பப்பாளி பழத்தின் மருத்துவ பயன்கள்



எல்லா காலங்களிலும் கிடைக்கும் பப்பாளியில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. நூறு கிராம் பப்பாளியில் 39 கலோரிகள், 5.90 கிராம் சர்க்கரை, 9.81 கிராம் கார்போஹைட்ரேட், 1.8 கிராம் டயட்டரி நார்ச்சத்து, 0.14 கிராம் கொழுப்பு, 0.61 கிராம் புரோட்டீன், 328 மைக்ரோகிராம் வைட்டமின் ஏ, 0.04 mg வைட்டமின், 0.05 mg வைட்டமின் பி2, 0.338 mg வைட்டமின் பி3, 0.1 mg வைட்டமின் பி6, 38 mg வைட்டமின் பி9, 61.8 mg வைட்டமின் சி, 24 mg கால்சியம், 0.10 mg இரும்புச்சத்து, 10 mg மக்னீசியம், 5 mg பாஸ்பரஸ், 257 mg பொட்டாசியம், 3 mg சோடியம் நிறைந்துள்ளது. பப்பாளியில் சாச்சுரேட்டட் கொழுப்புக்கள், மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள், பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள், ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் ஒமேகா-6 ஃபேட்டி ஆசிட், ஜிங்க், காப்பர், மாங்கனீசு, செலினியம் போன்றவையும் நிறைந்துள்ளன. இவ்வளவு சத்துக்களைத் தன்னுள் கொண்டுள்ள பப்பாளியை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் காணொளி காட்சி தொகுப்பாக: 



------------------------------------
முந்தைய பதிவுகள்
------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
----------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Friday, 19 January 2018

முடக்கத்தான் கீரை மருத்துவ குணங்கள்


வீட்டு தோட்டங்களில் எளிதாக வளரக்கூடிய கொடியாக படர்ந்து வளரும் முடக்கத்தான் கீரை செடியின் மருத்துவ குணங்கள்

மூட்டு வலி போக்கும் முடக்கத்தான் கீரை

முடக்கத்தான் கீரை தோசை: 
மூட்டு வலியால் அவதிப்படுபவர்கள் ஒரு கைப்பிடி முடக்கத்தான் கீரையை, 1/2 டீஸ்பூன் சீரகம், 1 பச்சைமிளகாய் சேர்த்து அரைத்து அதை ஒரு கப் இட்லி மாவுடன் கலந்து தோசையாக ஊற்றி சாப்பிட்டு வர மூட்டு வலி பறந்து போகும்.

முடக்கத்தான் கீரை துவையல்:
வாணலியில் எண்ணெய் விட்டு இரண்டு வர மிளகாயுடன் ஒரு டீஸ்பூன் வெள்ளை உளுத்தம்பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைக்கவும், 1/4 கப் முடக்கத்தான் கீரையை எண்ணெய் விட்டு வதக்கி கொள்ளவும், சிறிது புளியை நூறு கிராம் தேங்காய் துருவலுடன் சேர்த்து வறுத்து கொள்ளவும். வறுத்து வைத்த எல்லா எல்லா பொருட்களையும் சேர்த்து சிறிது உப்பு சேர்த்து அரைத்து எடுத்தால் முடக்கத்தான் கீரை துவையல் தயார். 

சளி இருமலை விரட்டும் முடக்கத்தான் கீரை சூப்:
ஐந்து மிளகுடன் 1/2 டீஸ்பூன் சீரகம் சேர்த்து அரைத்து கொள்ளவும், அதனுடன் இரண்டு பல் பூண்டு சேர்த்து அரைத்து கொள்ளவும். வாணலியில் 1/2  டீஸ்பூன் நெய் விட்டு சூடானவுடன் அரைத்து வைத்திருக்கும் மிளகு, சீரகம், பூண்டு விழுதை மிதமான சூட்டில் வதக்கி கொள்ளவும். இதில் 1/2 கப் முடக்கத்தான் கீரையை சேர்த்து வதக்கவும், நன்கு வதங்கியவுடன் இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு கீரையை வேக விடவும், பாதி வெந்த நிலையில் தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும். கீரை நன்கு நன்கு வெந்தவுடன் அடுப்பிலிருந்து எடுத்து சிறிது நேரம் ஆற விடவும். ஆறிய பின்னர் பருப்பு மசிக்கும் மத்து கொண்டு கடைந்து பின்னர் வடிகட்டி எடுத்தால் சுவையான முடக்கத்தான் கீரை சூப் தயார். இந்த சூப் குழந்தைகளுக்கு வரும் சளி, இருமல் தொந்தரவை விரட்டும். 

பொடுகு போக்கும் முடக்கத்தான் கீரை:
ஒரு கட்டு முடக்கத்தான் கீரையை ஒரு லிட்டர்  தண்ணீரில் கொதிக்க வைத்து, ஆரிய பின்னர் அந்த நீரை கொண்டு தலை குளிப்பதற்கு முன்பு தலை முடியை நன்கு  அலசி விட்டு குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும். முடக்கத்தான் கீரையை நல்லெண்ணெய்யுடன் சேர்த்து கொதிக்க வைத்து பின்னர்  ஆற வைத்து எடுத்து கொள்ளவும். அந்த எண்ணெயை குளிப்பதற்கு முன் தலைக்கு தேய்த்து குளித்து வர பொடுகு தொல்லை நீங்கும். 

மூட்டு வலி போக்கும் முடக்கத்தான் கீரை ஒத்தடம்:
முடக்கத்தான் கீரையை ஆமணக்கு எண்ணெயில் லேசான சூட்டில் சூடாக்கி அந்த சூடான இலைகளை ஒரு வெள்ளை துணியில் எடுத்து கட்டி கொண்டு அதை கொண்டு வலி இருக்குமிடத்தில் ஒத்தடம் கொடுக்க மூட்டு வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கும். 
------------------------------------
முந்தைய பதிவுகள்
------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
----------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Friday, 12 January 2018

இதயம் காக்கும் எலுமிச்சம்பழ சாறு - மருத்துவ பயன்கள்



ஹெல்த் டைம்ஸில் இந்த வாரம் எலுமிச்சம்பழத்தின் மருத்துவ பயன்களையும் எலுமிச்சம்பழ சாறுடன்   தேன், வெள்ளரிக்காய், புதினா, இஞ்சி சாறு  சேர்த்து உட்கொள்ளும் போது கிடைக்கும் மருத்துவ பயன்களையும் தொகுத்து காணொளி காட்சி வடிவில் கொடுத்துள்ளோம்  , காணொளி காட்சி பிடித்திருந்தால் ஹெல்த்  டைம்ஸ் யூ டியுப் சானல் சப்ஸ்கிரைப் செய்யுங்கள், லைக் செய்யுங்கள்,  உங்கள் நண்பர்களுக்கு சமூக ஊடகங்கள் மூலம் ஹெல்த்  டைம்ஸ் யூ டியுப் சானலை  பகிரவும் தவறாதீர்கள். 


------------------------------------
முந்தைய பதிவுகள்
------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
----------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Friday, 5 January 2018

ஜலதோஷம் போக்கும் கற்பூரவல்லி இலைகள்


வீட்டு தோட்டங்களில் எளிதாக வளரகூடிய கற்பூரவல்லி செடியும் இலைகள், ஜலதோஷம், தலைவலி போக்கும் அற்புதமான மூலிகையாக விளங்குகிறது, லேசான காரச்சுவையுடன் இருக்கும் கற்பூரவல்லி இலைகளை துளசி இலை போல மென்று சாப்பிடலாம், இந்த இலையின் மருத்துவ பயன்களை கீழே பார்க்கலாம்:

ஜலதோஷம், இருமல் போக்கும் கற்பூரவல்லி இலைச்சாறு:
குழந்தைகளுக்கு குளிர் காலங்களில் வரும் ஜலதோஷம், இருமல் நீங்க கற்பூரவல்லி இலைச்சாறு எடுத்து (சாறில் 1 அல்லது 2 டீஸ்பூன் வெந்நீர் சேர்க்கலாம்) சிறிது தேனுடன் சேர்த்து 

கொடுத்தால் ஜலதோஷம், இருமல் இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும். (தேனுக்கு பதில் சர்க்கரை சேர்க்க வேண்டாம் அது இருமலை இன்னும் அதிகபடுத்தி விடும்)

கற்பூரவல்லி இலைகளை நன்கு கொதிக்கும் தண்ணீரில் போட்டு அதிலிருந்து வரும் ஆவியை உள்ளுக்கு இழுத்தால் நீண்ட நாள் நெஞ்சு சளி தொல்லை நீங்கும், குழந்தைகளுக்கு கற்பூரவல்லி இலைச்சாறு எடுத்து நெஞ்சில் தடவினால் சளித்தொல்லை நீங்கும்.

தலைவலி நிவாரணி:
தலைவலி போக்கும் மிகசிறந்த தலைவலி நிவாரணியாக கற்பூரவல்லி இலை விளங்குகிறது. தலைவலி வரும்போது கற்பூரவல்லி இலைச்சாறை நெற்றியில் தடவ தலைவலி நீங்கும்.

இயற்கை கொசுவிரட்டி:
கற்பூரவல்லி இலைச்சாறை உடலில் தேய்த்து கொண்டு படுத்தால் கொசுத்தொல்லை இல்லாமல் நிம்மதியாக உறங்கலாம். குளிர்காலங்களில், இந்த இலைகளை எண்ணெய் குளியலின் போது எண்ணையோடு சேர்த்து குளிக்கும்போது பயன்படுத்துவதால் ஜலதோஷம், இருமல் வராமல் தடுக்கும். 

மேலும் கற்பூரவல்லி இலைகள் ஆஸ்துமா, தோல் நோய்கள், செரிமான கோளாறுகள், வாய்புண்கள் நீங்க மருந்தாக பயன்படுகிறது. 
------------------------------------
முந்தைய பதிவுகள்
------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Friday, 29 December 2017

பித்தம் போக்கும் கொத்தமல்லி இலை மருத்துவ பயன்கள்

ஆங்கிலத்தில் Coriander leaves என்று  அழைக்கப்படும் சிறு தாவர குடும்பத்தை சேர்ந்த கொத்தமல்லியை மருத்துவ குணம் வாய்ந்த ஒரு மூலிகை தாவரமாக விளங்குகிறது.   கொத்தமல்லியின் விதையை தனியா என்று அழைக்கப்படுகிறது (coriander seeds). கொத்தமல்லி விதையை காயவைத்து அரைத்து பொடியாக்கி தனியா பொடியாகவும் பயன்படுத்தபடுகிறது. சாம்பார், ரசம் இவற்றில் தழையாக பயன்படுத்தப்படும் வாசனை மிகுந்த கீரையாக கொத்தமல்லி தளை விளங்குகிறது. வாசனை பொருளாக சமையலில் சேர்க்கப்படும் கொத்தமல்லி தளை, இரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்ட மிக சிறந்த இயற்கை மருந்தாகும். கொத்தமல்லியின்  இலை, தண்டு மற்றும் வேர் மருத்தவ குணம் கொண்டவை ஆகும். கொத்தமல்லி தளையுடன் மிளகு, புளி, உப்பு சேர்த்து அரைத்து துவையலாக உண்ணலாம். பித்தம், வாந்தி இரத்த அழுத்த நோய் போன்றவற்றை கட்டுப்படுத்தும் கொத்தமல்லி தளையில் வைட்டமின் ஏ, பி, பி1, சி, சுண்ணாம்பு சத்து 
மற்றும் இரும்புச் சத்துக்களும் அதிகம் உள்ளது. சுண்ணாம்புச் சத்து எலும்புகளை வலுவாக்குகிறது, இரும்புச் சத்து அதிகம் இருப்பதால் மூளையை பலப்படுத்தும். 

கொழுப்பை குறைத்து, இரத்த அழுத்தத்தை சீராக்கும்: 
சிறிதளவு சீரகத்தை கொத்தமல்லி சாற்றில் ஊற வைத்து பிறகு அதை காய வைத்து பொடியாக்கி தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் சாப்பிட்டு வர உடலில் உள்ள கொழுப்பு குறைவதுடன் இரத்த அழுத்தமும் சீராக்கும்.

நீரிழிவு நோய் குணமாக:
நீரிழிவு நோய் குணமாக்க தயாரிக்கப்படும் மருந்துகளில் முக்கியமான உட்பொருளாக கொத்தமல்லி விளங்குகிறது. கொத்தமல்லி தளை சர்க்கரை அளவை கட்டுபடுத்தும் மிக சிறந்த மூலிகையாக விளங்குகிறது.

அஜீரண கோளாறுகள் நீங்கிட:
கொத்தமல்லி தளையை துவையலாக, சட்னியாக உணவில் சேர்த்துகொண்டால் அது பசியை தூண்டுவதுடன் அஜீரண கோளாறுகளையும் குனமாக்குகிறது. உடலில் உள்ள நச்சுக்கழிவுகளை அகற்றும் சிறந்த கிருமி நாசினியாக கொத்தமல்லி விளங்குகிறது. அசுத்த வாயுக்கள் உடலிலிருந்து வெளியேற்றி வாய்வு தொந்தரவுகளிலிருந்து காக்கிறது. சிறுநீரகக் கோளாறு  போக்கும் வல்லமை உடையது.

கொத்தமல்லி சட்னி செய்முறை காணொளி காட்சி 


முகம் பொலிவு பெற:
கொத்தமல்லி தளை முகத்தில் வரும் முகப்பரு, கரும்புள்ளிகள் போன்றவற்றை குணப்படுத்தி முகம் பொலிவு பெற உதவுகிறது மேலும் தோலில் ஏற்படும் அலர்ஜி, அரிப்பு, எரிச்சல் உட்பட பல தோல் நோய்களுக்கு மருந்தாக விளங்குகிறது.    

பார்வை குறைபாடுகள் போக்கும்:  
கொத்தமல்லி தளையை உணவாக தொடர்ந்து பயன்படுத்தி வர பார்வை குறைபாடுகள் நீங்குகிறது.  

வாய்புண்கள் குணமாக:
உடல் சூட்டை குறைக்கும் குளிர்ந்த தன்மையுள்ள கொத்தமல்லி தளையை மைய அரைத்து அதை வாய்புண்களில் பற்று போட்டால் உடல் சூடு காரணமாக ஏற்படும் வாய்புண்கள் குணமாகிறது.  

பெண்களுக்கு மாதவிலக்கு பிரச்சினைகள் குணமாக:  
கொத்தமல்லி சாற்றில் கருஞ்சீரகத்தை ஊற வைத்து பின்பு காய வைத்து பொட்டியாக்கி தினமும் ஒரு கிராம் அளவு தேனில் குழைத்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு பிரச்சினைகள் குணமாகும்.

கொத்தமல்லி  மருத்துவ குணங்கள் விளக்கும் காணொளி காட்சி 

------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Thursday, 21 December 2017

வல்லாரை கீரை மருத்துவ குணங்கள் & சமையல் குறிப்புகள்


பல மருத்துவ குணங்கள் கொண்ட அற்புத மூலிகையாக வல்லாரை கீரை விளங்குகிறது, வல்லமை மிகுந்த கீரை என்பதால் வல்லரை என பெயர் பெற்றிருக்கிறது, பல்லாயிரகணக்கான ஆண்டுகளாக ஆயுர்வேத மருத்துவ முறையில் வல்லாரை கீரை பல நோய்கள் தீர்க்கும் மருத்துவ மூலிகையாக பயன்பட்டு வருவதாக சுஸ்ருத சம்ஹிதா என்னும் பண்டைய மருத்துவ நூல் தெரிவிக்கிறது. வல்லாரை கீரை நினைவாற்றலை அதிகப்படுத்தி நரம்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது, இரத்த ஓட்டத்தை அதிகரித்து விரைவாக மூப்படைவதை தடுத்து இளமையோடு வைக்கிறது. வல்லாரை கீரை மனவளர்ச்சிக்கும், மாணவர்களுக்கு ஞாபக திறன் அதிகரிக்கவும் பயன்படுகிறது, வல்லாரை கீரை தோல் நோய்களை விலக்கி, தோலை பாதுகாப்பதுடன், முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது. தென் இந்தியாவில் வல்லாரை கீரையை கொண்டு கூட்டு, பொரியல், சூப், தோசை என்று உணவாக பயன்படுத்துகின்றனர். 

சமீப காலத்தில் வல்லாரை கீரை பற்றி மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளில் இந்த கீரை நரம்பு மண்டலத்தை பாதுகாக்கும் தன்மை கொண்டுள்ளதாக இருப்பது தெரிய வந்துள்ளது.  

வல்லாரை மூளையில் உள்ள செல்களை பாதுகாப்பதுடன், நினைவாற்றலை அதிகரிக்க செய்கிறது.

வல்லாரை கீரை மன அழுத்தத்தை குறைப்பதுடன், மனச்சோர்வை அகற்றுகிறது.

தூக்கமின்மை, அல்செய்மர் போன்ற வியாதிகளை குணப்படுத்த மருந்தாக பயன்படுகிறது. 

வல்லாரை இரத்தத்தை சுத்திகரித்து, உயர் ரத்த அழுத்த வியாதியை கட்டுக்குள் கொண்டு வருகிறது.

உடலில் ஏற்படும் காயங்களை ஆற்ற வல்லாரையை காயங்களின் மேல் வெளிப்புற மருந்தாகவும் பயன்படுத்தலாம்.

வல்லாரை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் உடல் சூட்டை குறைக்கிறது.

வல்லாரை கீரை கண் பார்வை மங்குதல், கண் எரிச்சல் போன்ற நோய்களுக்கு அருமருந்தாக விளங்குகிறது, மேலும் கண் நரம்புகளை பார்வை திறனை அதிகரிக்க செய்கிறது. 

உடலுக்கு குளிர்ச்சி தரும் வல்லாரையை உட்கொண்டால் பித்தம் குறைவதுடன், அல்சர், அசிடிட்டி, வயிற்றுப்போக்கு போன்ற நோய்களுக்கும் வல்லாரை சிறந்த மருந்தாக விளங்குகிறது.

பலவிதமான தோல் நோய்களுக்கு மருந்தாக பயன்படும் வல்லாரை முகப்பருக்களை குணப்படுத்தும் மருந்தாக விளங்குகிறது. 

தொடர்ந்து வல்லாரை கீரையை உட்கொண்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன், இதன் மூலம் நம் உடல்நலம், மனநலம் காத்து நம் ஆயுளையும் நீட்டிக்கிறது. 

வல்லாரை கீரையை கொண்டு கூட்டு, தோசை, சட்னி சமையல் குறிப்புகள்

வல்லாரை கீரை கூட்டு



வல்லாரை கீரை சட்னி 



வல்லாரை கீரை தோசை 


------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Thursday, 14 December 2017

துளசி - மருத்துவ குணங்கள்



வைரஸ் காய்ச்சல் மூளை காய்ச்சலுக்கு அற்புதமான மருந்து இந்த துளசி,  துளசி இலைக்கு நரம்பு கோளாறு, மன இறுக்கம், ஞாபக சக்தி குறைவு, ஆஸ்துமா, இருமல் மற்றும்  தொண்டை நோய்களை குணமாக்குகிறது. 

தோல் சுருக்கம், பார்வை கோளாறுகள் நீங்கிட துளசி அற்புதமான மருந்து என்று சித்த மருத்துவம் கூறுகிறது. வெட்டுக் காயங்களுக்குத் துளசி இலை சாற்றை பூசி வந்தால் அவை விரைவில் குணமடையும். 

குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் வாழ்நாள் முழுவதும் வராமல் தடுக்க தினமும் துளசி இலைகளை தின்று வந்தால் போதும். அற்புதமான ஜீரண சக்தியும் புத்துணர்ச்சியும் துளசி இலைகளை சாப்பிடுவதன் மூலம் பெறலாம். 


துளசி இலையை காய்ச்சலுக்கு மருந்தாக பயன்படுத்தும் முறை:
பத்து துளசி இலைகளுடன் ஐந்து மிளகை நசுக்கி இரண்டு டம்ளர் நீர் விட்டு அதை அரை டம்ளராகும் வரை கொதிக்க வைத்து ஆறிய பின் அந்த நீரை குடிக்கவும், பின்பு சிறிது எலுமிச்சை சாறை அருந்தினால் எந்த வகை காய்ச்சலாய் இருந்தாலும் அது சிறிது சிறிதாக குணமாகி விடும் என்கிறது சித்த மருத்துவம். மேலும், துளசி நீரை ஒரு மண்டலம் (48 நாட்கள்) தொடர்ந்து பருகினால் 448 வகை நோய்கள் குணமாகும் என்று சித்த மருத்துவம் கூறுகிறது. 

தோல் நோய்கள் நீங்கிட:
துளசி இலைகளை எலுமிச்சைச்சாறு விட்டு நன்கு மை போல அரைத்து அந்த விழுதைத் தோலில் தடவி வந்தால் நாள்பட்ட சொறி, படை  சிரங்குகள் காணாமல் போய் விடும்.

பேன், பொடுகு நீங்க:
துளசி சாற்றுடன் எலுமிச்சசை சாறு கலந்து வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து குளித்து வந்தால் பேன், பொடுகு தொல்லை நீங்கும்.

வாய் துர்நாற்றம் நீங்க:
வாய் துர்நாற்றத்தைப்  போக்கி, நமது உடலுக்கான சிறந்த கிருமிநாசினியாக துளசி விளங்குகிறது. துளசி இலையைப் போட்டு ஊறவைத்த நீரைத் தொடர்ந்து பருகி வந்தால் சர்க்கரை நோய் நம்மை அண்டாது.

வியர்வை நாற்றம் நீங்க:
வியர்வை நாற்றத்தை  தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே  கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் உடல் துர்நாற்றம் நீங்கி உடல் மணக்கும்.

துளசி நீர்:
ஒரு சுத்தமான செம்பு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் விட்டு ஒரு கைப்பிடி அளவு துளசி இலைகளை போட்டு அந்த பாத்திரத்தை எட்டு மணி நேரம் மூடி வைக்கவும், பின்னர் அந்த துளசி நீரை வெறும் வயிற்றில் குடித்து வர சிறுநீரகங்களில் சேரும் நச்சுக்கழிவுகளை அகற்றி தூய்மையாக்குகிறது, இந்த துளசி பானத்தை தினமும் குடித்து வந்தால் நரம்புகள் அமைதியடைந்து மூளையில் இரத்த ஓட்டம் சீரடைகிறது, இதனால் மன அழுத்தமும் குறைகிறது.  இந்த துளசி நீரை ஒரு மண்டலம் அருந்தி வர ரத்தத்தில் உள்ள தேவையற்ற வேதி பொருட்கள், விஷ நீர்கள் சிறுநீர் வழியாக வெளியேறி விடுகிறது, இதனால் இரத்தம் சுத்தமாகிறது. 

Thursday, 7 December 2017

(ஐந்து வகை அரிசி) சத்து மிகுந்த சிறு தானிய பொங்கல்

நாம் உண்ணும் உணவே நமது உடல் ஆரோக்கியத்தை தீர்மானிக்கிறது. அதிக அளவு தேவையில்லாத கொழுப்பையும், சர்க்கரையையும் கொண்ட பீட்சா, பர்கர் மற்றும் மைதா பொருட்களை கொண்டு தயார் செய்யப்படும் பாஸ்ட்புட் உணவுகளை தவிர்த்து இயற்கை உணவான சிறு தானியங்கள் கொண்டு செய்யப்படும் உணவுகளை சாப்பிட்டு வந்தாலே பல நோய்கள் நம்மை விட்டு ஓடிப்போகும். நான்கு சிறு தானியங்களின் பயன்களையும் அந்த  சிறு தானியங்களை பயன்படுத்தி செய்யப்படும் ஒரு பொங்கல் வகையையும் இன்று   பார்க்கலாம்.

தினை:
கி.மு 6000லேயே சீனாவில் பயிரடப்பட்டு உபயோகிக்கப்பட்டு வந்துள்ளது. பழங்காலத்தில் முதலாவதாக பயிரிடப்பட்டு மனிதனால் உபயோகிக்கப்பட்ட தானிய வகை தினை. தினை மாவு அதிக சத்து கொண்ட உணவுகளில் ஒன்று. தினையில் உடலுக்குத் தேவையான புரத சத்துக்களும், ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளது. தினையில் புரதம், கொழுப்புச்சத்து, தாது உப்புக்கள், நார்ச்சத்துக்கள், மாவுச்சத்து மற்றும் வைட்டமின் ‘பி’, பாஸ்பரஸ், சுண்ணாம்புச்சத்து உள்ளது. தினை இதயத்தை பலப்படுத்தும். பசியை  உண்டாக்கும். 
   
குதிரைவாலி:
கோதுமையை விட ஆறு மடங்கு நார்ச்சத்து கொண்டது குதிரைவாலி அரிசி, குதிரைவாலி அரிசி சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டுள்ளது. நார்ச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ் ஆகியவை அடங்கியுள்ளது. இது சிறந்த ஆண்டி ஆக்சிடன்ட் ஆக வேலை செய்கிறது. 

வரகு:
சிறுதானியங்களில் மிக முக்கியமானது வரகு. வரகில் உள்ள நார்ச்சத்து, அரிசி, கோதுமையில் இருப்பதை விட அதிகம். வரகில் மாவுச்சத்து குறைந்த அளவில் இருப்பதால், இது உடல் ஆரோக்கியத்திற்கு உகந்ததாகக் கருதப்படுகிறது. மற்ற தானியங்களுடன் ஒப்பிடும்போது அதிக சத்துக்கள் நிறைந்ததாகவும் புரதச் சத்து மற்றும் தாது உப்புக்களை கொண்டதாகவும் இருக்கிறது. வரகு நார்சத்து மிகுந்தும், இரும்பு, கால்சியம் மற்றும் பி வைட்டமின்களும், தாதுப்பொருட்களும் நிரம்ப உள்ளன. மேலும், விரைவில் செரிமானம் அடையும் தன்மை கொண்ட  உடலுக்குத் தேவையான சக்தியையும் கொடுக்கும். மேலும், இதில் உடல் எடையைக் குறைக்கக்கூடிய புரதம், இரும்பு மற்றும் சுண்ணாம்புச் சத்துக்களை கொண்டுள்ளது. மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் வரகைச் சமைத்துச் சாப்பிடுவது நல்லது. வரகு, சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. மூட்டுவலியைக் குறைக்கிறது. 

சாமை:
நெல் அரிசியைக் காட்டிலும் ஏழு மடங்கு நார்சத்து கொண்ட தானியம் சாமை. சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் கொண்டுவர முக்கிய பங்கு வகிக்கும் நார்சத்து இதில் அதிகமாக உள்ளது.  இதனை தினசரி உணவாக சாப்பிடும்போது நீரிழிவு நோயினை கட்டுப்படுத்தவும், வராமலும் தடுத்திட முடியும். மற்ற சிறு தானியங்களைக் காட்டிலும் சாமையில் இரும்பு சத்து அதிகம் உள்ளத்தால், இரத்தசோகை வருவதற்கான வாய்பினைக் குறைக்கிறது. இளம் பெண்களின் முக்கிய உணவாக சாமை அமைவது அவசியமான ஒன்று. உடலிலிருந்து கழிவுகள் சரியாக வெளியேறவில்லை என்றாலே அது பல  நோய்களுக்கு மூல காரணியாக அமைந்து விடும். நோய்களுக்கெல்லாம் மூலகாரணமாக கருதப்படும் மலச்சிக்கலை தீர்க்கிறது சாமை. வயிற்றுக் கோளாறுகளுக்கு சாமை நல்மருந்தாகவும் திகழ்கிறது. சாமை தாது சத்துக்களை உடலில் அதிகரித்து உயிரணுக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துகிறது.


தேவையான பொருட்கள்:

திணை அரிசி - 2 ஸ்பூன் 
சாமை அரிசி - 2 ஸ்பூன் 
குதிரைவாலி அரிசி- 2 ஸ்பூன் 
வரகு அரிசி - 2 ஸ்பூன் 
பச்சரிசி - 2 ஸ்பூன் 
(சொல்லப்பட்ட அளவில் ஐந்து வகை அரிசிகளையும் சேர்த்து எடுத்தால் 1 டம்ளர் அளவு அரிசி வரும்)
பாசிபருப்பு - 3 ஸ்பூன் 
மிளகுத்தூள் - 2 ஸ்பூன் 
சீரகம் - 1 ஸ்பூன் 
பூண்டு - 10 பூண்டு பற்கள் 
முந்திரிபருப்பு - சிறிது 
நெய்  - 3 ஸ்பூன் 
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

முதலில் நான்கு வகை சிறு தானிய அரிசிகளையும் பச்சரிசியோடு சேர்த்து தண்ணீரில் ஊற வைத்து அலசி கொள்ளவும், பின்பு சுத்தமான தண்ணீரில் (1 டம்ளருக்கு 4 1/2 டம்ளர் தண்ணீர் விட்டு) நான்கு வகை சிறு தானிய அரிசிகளையும் குறைந்தது அரை மணி நேரம் ஊற வைக்கவும். பாசிபருப்பு தனியாக ஊற வைக்கவும்.   

            

குக்கர் அடி பாத்திரத்தில் 2 ஸ்பூன் நெய் விட்டு மிளகுதூள், சீரகம், பூண்டு பற்கள், முந்திரிபருப்பு  போட்டு காஸ் அடுப்பை சிம்மில் வைத்து வதக்கி கொள்ளவும். வதக்கிய பின் அரிசியை ஊற வைத்த (4 1/2 டம்ளர் தண்ணீரோடு) பாத்திரத்தில் ஊற்றவும், இதில் ஊற வைத்த பாசிபருப்பு சேர்த்து குக்கரை மூடி விடவும். ஏழு முதல் எட்டு விசில் வரை வேக விடவும். சிறிது நேரம் கழித்து குக்கரை திறந்து அரிசி நன்கு வெந்து தயாராகி இருக்கும் பொங்கலில் 1 ஸ்பூன் நெய் விட்டு கிளறி சூடாக பரிமாறவும்.

மிகவும் சத்து மிகுந்த சுவையான சிறு தானிய பொங்கல் இது. 
------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்