Friday 5 January 2018

ஜலதோஷம் போக்கும் கற்பூரவல்லி இலைகள்


வீட்டு தோட்டங்களில் எளிதாக வளரகூடிய கற்பூரவல்லி செடியும் இலைகள், ஜலதோஷம், தலைவலி போக்கும் அற்புதமான மூலிகையாக விளங்குகிறது, லேசான காரச்சுவையுடன் இருக்கும் கற்பூரவல்லி இலைகளை துளசி இலை போல மென்று சாப்பிடலாம், இந்த இலையின் மருத்துவ பயன்களை கீழே பார்க்கலாம்:

ஜலதோஷம், இருமல் போக்கும் கற்பூரவல்லி இலைச்சாறு:
குழந்தைகளுக்கு குளிர் காலங்களில் வரும் ஜலதோஷம், இருமல் நீங்க கற்பூரவல்லி இலைச்சாறு எடுத்து (சாறில் 1 அல்லது 2 டீஸ்பூன் வெந்நீர் சேர்க்கலாம்) சிறிது தேனுடன் சேர்த்து 

கொடுத்தால் ஜலதோஷம், இருமல் இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும். (தேனுக்கு பதில் சர்க்கரை சேர்க்க வேண்டாம் அது இருமலை இன்னும் அதிகபடுத்தி விடும்)

கற்பூரவல்லி இலைகளை நன்கு கொதிக்கும் தண்ணீரில் போட்டு அதிலிருந்து வரும் ஆவியை உள்ளுக்கு இழுத்தால் நீண்ட நாள் நெஞ்சு சளி தொல்லை நீங்கும், குழந்தைகளுக்கு கற்பூரவல்லி இலைச்சாறு எடுத்து நெஞ்சில் தடவினால் சளித்தொல்லை நீங்கும்.

தலைவலி நிவாரணி:
தலைவலி போக்கும் மிகசிறந்த தலைவலி நிவாரணியாக கற்பூரவல்லி இலை விளங்குகிறது. தலைவலி வரும்போது கற்பூரவல்லி இலைச்சாறை நெற்றியில் தடவ தலைவலி நீங்கும்.

இயற்கை கொசுவிரட்டி:
கற்பூரவல்லி இலைச்சாறை உடலில் தேய்த்து கொண்டு படுத்தால் கொசுத்தொல்லை இல்லாமல் நிம்மதியாக உறங்கலாம். குளிர்காலங்களில், இந்த இலைகளை எண்ணெய் குளியலின் போது எண்ணையோடு சேர்த்து குளிக்கும்போது பயன்படுத்துவதால் ஜலதோஷம், இருமல் வராமல் தடுக்கும். 

மேலும் கற்பூரவல்லி இலைகள் ஆஸ்துமா, தோல் நோய்கள், செரிமான கோளாறுகள், வாய்புண்கள் நீங்க மருந்தாக பயன்படுகிறது. 
------------------------------------
முந்தைய பதிவுகள்
------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்