Thursday 21 December 2017

வல்லாரை கீரை மருத்துவ குணங்கள் & சமையல் குறிப்புகள்


ல மருத்துவ குணங்கள் கொண்ட அற்புத மூலிகையாக வல்லாரை கீரை விளங்குகிறது, வல்லமை மிகுந்த கீரை என்பதால் வல்லரை என பெயர் பெற்றிருக்கிறது, பல்லாயிரகணக்கான ஆண்டுகளாக ஆயுர்வேத மருத்துவ முறையில் வல்லாரை கீரை பல நோய்கள் தீர்க்கும் மருத்துவ மூலிகையாக பயன்பட்டு வருவதாக சுஸ்ருத சம்ஹிதா என்னும் பண்டைய மருத்துவ நூல் தெரிவிக்கிறது. வல்லாரை கீரை நினைவாற்றலை அதிகப்படுத்தி நரம்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது, இரத்த ஓட்டத்தை அதிகரித்து விரைவாக மூப்படைவதை தடுத்து இளமையோடு வைக்கிறது. வல்லாரை கீரை மனவளர்ச்சிக்கும், மாணவர்களுக்கு ஞாபக திறன் அதிகரிக்கவும் பயன்படுகிறது, வல்லாரை கீரை தோல் நோய்களை விலக்கி, தோலை பாதுகாப்பதுடன், முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது. தென் இந்தியாவில் வல்லாரை கீரையை கொண்டு கூட்டு, பொரியல், சூப், தோசை என்று உணவாக பயன்படுத்துகின்றனர். 

சமீப காலத்தில் வல்லாரை கீரை பற்றி மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளில் இந்த கீரை நரம்பு மண்டலத்தை பாதுகாக்கும் தன்மை கொண்டுள்ளதாக இருப்பது தெரிய வந்துள்ளது.  

வல்லாரை மூளையில் உள்ள செல்களை பாதுகாப்பதுடன், நினைவாற்றலை அதிகரிக்க செய்கிறது.

வல்லாரை கீரை மன அழுத்தத்தை குறைப்பதுடன், மனச்சோர்வை அகற்றுகிறது.

தூக்கமின்மை, அல்செய்மர் போன்ற வியாதிகளை குணப்படுத்த மருந்தாக பயன்படுகிறது. 

வல்லாரை இரத்தத்தை சுத்திகரித்து, உயர் ரத்த அழுத்த வியாதியை கட்டுக்குள் கொண்டு வருகிறது.

உடலில் ஏற்படும் காயங்களை ஆற்ற வல்லாரையை காயங்களின் மேல் வெளிப்புற மருந்தாகவும் பயன்படுத்தலாம்.

வல்லாரை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் உடல் சூட்டை குறைக்கிறது.

வல்லாரை கீரை கண் பார்வை மங்குதல், கண் எரிச்சல் போன்ற நோய்களுக்கு அருமருந்தாக விளங்குகிறது, மேலும் கண் நரம்புகளை பார்வை திறனை அதிகரிக்க செய்கிறது. 

உடலுக்கு குளிர்ச்சி தரும் வல்லாரையை உட்கொண்டால் பித்தம் குறைவதுடன், அல்சர், அசிடிட்டி, வயிற்றுப்போக்கு போன்ற நோய்களுக்கும் வல்லாரை சிறந்த மருந்தாக விளங்குகிறது.

பலவிதமான தோல் நோய்களுக்கு மருந்தாக பயன்படும் வல்லாரை முகப்பருக்களை குணப்படுத்தும் மருந்தாக விளங்குகிறது. 

தொடர்ந்து வல்லாரை கீரையை உட்கொண்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன், இதன் மூலம் நம் உடல்நலம், மனநலம் காத்து நம் ஆயுளையும் நீட்டிக்கிறது. 

வல்லாரை கீரையை கொண்டு கூட்டு, தோசை, சட்னி சமையல் குறிப்புகள்

வல்லாரை கீரை கூட்டு



வல்லாரை கீரை சட்னி 



வல்லாரை கீரை தோசை 


------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்