Thursday, 14 December 2017

துளசி - மருத்துவ குணங்கள்



வைரஸ் காய்ச்சல் மூளை காய்ச்சலுக்கு அற்புதமான மருந்து இந்த துளசி,  துளசி இலைக்கு நரம்பு கோளாறு, மன இறுக்கம், ஞாபக சக்தி குறைவு, ஆஸ்துமா, இருமல் மற்றும்  தொண்டை நோய்களை குணமாக்குகிறது. 

தோல் சுருக்கம், பார்வை கோளாறுகள் நீங்கிட துளசி அற்புதமான மருந்து என்று சித்த மருத்துவம் கூறுகிறது. வெட்டுக் காயங்களுக்குத் துளசி இலை சாற்றை பூசி வந்தால் அவை விரைவில் குணமடையும். 

குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் வாழ்நாள் முழுவதும் வராமல் தடுக்க தினமும் துளசி இலைகளை தின்று வந்தால் போதும். அற்புதமான ஜீரண சக்தியும் புத்துணர்ச்சியும் துளசி இலைகளை சாப்பிடுவதன் மூலம் பெறலாம். 


துளசி இலையை காய்ச்சலுக்கு மருந்தாக பயன்படுத்தும் முறை:
பத்து துளசி இலைகளுடன் ஐந்து மிளகை நசுக்கி இரண்டு டம்ளர் நீர் விட்டு அதை அரை டம்ளராகும் வரை கொதிக்க வைத்து ஆறிய பின் அந்த நீரை குடிக்கவும், பின்பு சிறிது எலுமிச்சை சாறை அருந்தினால் எந்த வகை காய்ச்சலாய் இருந்தாலும் அது சிறிது சிறிதாக குணமாகி விடும் என்கிறது சித்த மருத்துவம். மேலும், துளசி நீரை ஒரு மண்டலம் (48 நாட்கள்) தொடர்ந்து பருகினால் 448 வகை நோய்கள் குணமாகும் என்று சித்த மருத்துவம் கூறுகிறது. 

தோல் நோய்கள் நீங்கிட:
துளசி இலைகளை எலுமிச்சைச்சாறு விட்டு நன்கு மை போல அரைத்து அந்த விழுதைத் தோலில் தடவி வந்தால் நாள்பட்ட சொறி, படை  சிரங்குகள் காணாமல் போய் விடும்.

பேன், பொடுகு நீங்க:
துளசி சாற்றுடன் எலுமிச்சசை சாறு கலந்து வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து குளித்து வந்தால் பேன், பொடுகு தொல்லை நீங்கும்.

வாய் துர்நாற்றம் நீங்க:
வாய் துர்நாற்றத்தைப்  போக்கி, நமது உடலுக்கான சிறந்த கிருமிநாசினியாக துளசி விளங்குகிறது. துளசி இலையைப் போட்டு ஊறவைத்த நீரைத் தொடர்ந்து பருகி வந்தால் சர்க்கரை நோய் நம்மை அண்டாது.

வியர்வை நாற்றம் நீங்க:
வியர்வை நாற்றத்தை  தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே  கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் உடல் துர்நாற்றம் நீங்கி உடல் மணக்கும்.

துளசி நீர்:
ஒரு சுத்தமான செம்பு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் விட்டு ஒரு கைப்பிடி அளவு துளசி இலைகளை போட்டு அந்த பாத்திரத்தை எட்டு மணி நேரம் மூடி வைக்கவும், பின்னர் அந்த துளசி நீரை வெறும் வயிற்றில் குடித்து வர சிறுநீரகங்களில் சேரும் நச்சுக்கழிவுகளை அகற்றி தூய்மையாக்குகிறது, இந்த துளசி பானத்தை தினமும் குடித்து வந்தால் நரம்புகள் அமைதியடைந்து மூளையில் இரத்த ஓட்டம் சீரடைகிறது, இதனால் மன அழுத்தமும் குறைகிறது.  இந்த துளசி நீரை ஒரு மண்டலம் அருந்தி வர ரத்தத்தில் உள்ள தேவையற்ற வேதி பொருட்கள், விஷ நீர்கள் சிறுநீர் வழியாக வெளியேறி விடுகிறது, இதனால் இரத்தம் சுத்தமாகிறது. 

Thursday, 7 December 2017

(ஐந்து வகை அரிசி) சத்து மிகுந்த சிறு தானிய பொங்கல்

நாம் உண்ணும் உணவே நமது உடல் ஆரோக்கியத்தை தீர்மானிக்கிறது. அதிக அளவு தேவையில்லாத கொழுப்பையும், சர்க்கரையையும் கொண்ட பீட்சா, பர்கர் மற்றும் மைதா பொருட்களை கொண்டு தயார் செய்யப்படும் பாஸ்ட்புட் உணவுகளை தவிர்த்து இயற்கை உணவான சிறு தானியங்கள் கொண்டு செய்யப்படும் உணவுகளை சாப்பிட்டு வந்தாலே பல நோய்கள் நம்மை விட்டு ஓடிப்போகும். நான்கு சிறு தானியங்களின் பயன்களையும் அந்த  சிறு தானியங்களை பயன்படுத்தி செய்யப்படும் ஒரு பொங்கல் வகையையும் இன்று   பார்க்கலாம்.

தினை:
கி.மு 6000லேயே சீனாவில் பயிரடப்பட்டு உபயோகிக்கப்பட்டு வந்துள்ளது. பழங்காலத்தில் முதலாவதாக பயிரிடப்பட்டு மனிதனால் உபயோகிக்கப்பட்ட தானிய வகை தினை. தினை மாவு அதிக சத்து கொண்ட உணவுகளில் ஒன்று. தினையில் உடலுக்குத் தேவையான புரத சத்துக்களும், ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளது. தினையில் புரதம், கொழுப்புச்சத்து, தாது உப்புக்கள், நார்ச்சத்துக்கள், மாவுச்சத்து மற்றும் வைட்டமின் ‘பி’, பாஸ்பரஸ், சுண்ணாம்புச்சத்து உள்ளது. தினை இதயத்தை பலப்படுத்தும். பசியை  உண்டாக்கும். 
   
குதிரைவாலி:
கோதுமையை விட ஆறு மடங்கு நார்ச்சத்து கொண்டது குதிரைவாலி அரிசி, குதிரைவாலி அரிசி சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டுள்ளது. நார்ச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ் ஆகியவை அடங்கியுள்ளது. இது சிறந்த ஆண்டி ஆக்சிடன்ட் ஆக வேலை செய்கிறது. 

வரகு:
சிறுதானியங்களில் மிக முக்கியமானது வரகு. வரகில் உள்ள நார்ச்சத்து, அரிசி, கோதுமையில் இருப்பதை விட அதிகம். வரகில் மாவுச்சத்து குறைந்த அளவில் இருப்பதால், இது உடல் ஆரோக்கியத்திற்கு உகந்ததாகக் கருதப்படுகிறது. மற்ற தானியங்களுடன் ஒப்பிடும்போது அதிக சத்துக்கள் நிறைந்ததாகவும் புரதச் சத்து மற்றும் தாது உப்புக்களை கொண்டதாகவும் இருக்கிறது. வரகு நார்சத்து மிகுந்தும், இரும்பு, கால்சியம் மற்றும் பி வைட்டமின்களும், தாதுப்பொருட்களும் நிரம்ப உள்ளன. மேலும், விரைவில் செரிமானம் அடையும் தன்மை கொண்ட  உடலுக்குத் தேவையான சக்தியையும் கொடுக்கும். மேலும், இதில் உடல் எடையைக் குறைக்கக்கூடிய புரதம், இரும்பு மற்றும் சுண்ணாம்புச் சத்துக்களை கொண்டுள்ளது. மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் வரகைச் சமைத்துச் சாப்பிடுவது நல்லது. வரகு, சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. மூட்டுவலியைக் குறைக்கிறது. 

சாமை:
நெல் அரிசியைக் காட்டிலும் ஏழு மடங்கு நார்சத்து கொண்ட தானியம் சாமை. சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் கொண்டுவர முக்கிய பங்கு வகிக்கும் நார்சத்து இதில் அதிகமாக உள்ளது.  இதனை தினசரி உணவாக சாப்பிடும்போது நீரிழிவு நோயினை கட்டுப்படுத்தவும், வராமலும் தடுத்திட முடியும். மற்ற சிறு தானியங்களைக் காட்டிலும் சாமையில் இரும்பு சத்து அதிகம் உள்ளத்தால், இரத்தசோகை வருவதற்கான வாய்பினைக் குறைக்கிறது. இளம் பெண்களின் முக்கிய உணவாக சாமை அமைவது அவசியமான ஒன்று. உடலிலிருந்து கழிவுகள் சரியாக வெளியேறவில்லை என்றாலே அது பல  நோய்களுக்கு மூல காரணியாக அமைந்து விடும். நோய்களுக்கெல்லாம் மூலகாரணமாக கருதப்படும் மலச்சிக்கலை தீர்க்கிறது சாமை. வயிற்றுக் கோளாறுகளுக்கு சாமை நல்மருந்தாகவும் திகழ்கிறது. சாமை தாது சத்துக்களை உடலில் அதிகரித்து உயிரணுக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துகிறது.


தேவையான பொருட்கள்:

திணை அரிசி - 2 ஸ்பூன் 
சாமை அரிசி - 2 ஸ்பூன் 
குதிரைவாலி அரிசி- 2 ஸ்பூன் 
வரகு அரிசி - 2 ஸ்பூன் 
பச்சரிசி - 2 ஸ்பூன் 
(சொல்லப்பட்ட அளவில் ஐந்து வகை அரிசிகளையும் சேர்த்து எடுத்தால் 1 டம்ளர் அளவு அரிசி வரும்)
பாசிபருப்பு - 3 ஸ்பூன் 
மிளகுத்தூள் - 2 ஸ்பூன் 
சீரகம் - 1 ஸ்பூன் 
பூண்டு - 10 பூண்டு பற்கள் 
முந்திரிபருப்பு - சிறிது 
நெய்  - 3 ஸ்பூன் 
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

முதலில் நான்கு வகை சிறு தானிய அரிசிகளையும் பச்சரிசியோடு சேர்த்து தண்ணீரில் ஊற வைத்து அலசி கொள்ளவும், பின்பு சுத்தமான தண்ணீரில் (1 டம்ளருக்கு 4 1/2 டம்ளர் தண்ணீர் விட்டு) நான்கு வகை சிறு தானிய அரிசிகளையும் குறைந்தது அரை மணி நேரம் ஊற வைக்கவும். பாசிபருப்பு தனியாக ஊற வைக்கவும்.   

            

குக்கர் அடி பாத்திரத்தில் 2 ஸ்பூன் நெய் விட்டு மிளகுதூள், சீரகம், பூண்டு பற்கள், முந்திரிபருப்பு  போட்டு காஸ் அடுப்பை சிம்மில் வைத்து வதக்கி கொள்ளவும். வதக்கிய பின் அரிசியை ஊற வைத்த (4 1/2 டம்ளர் தண்ணீரோடு) பாத்திரத்தில் ஊற்றவும், இதில் ஊற வைத்த பாசிபருப்பு சேர்த்து குக்கரை மூடி விடவும். ஏழு முதல் எட்டு விசில் வரை வேக விடவும். சிறிது நேரம் கழித்து குக்கரை திறந்து அரிசி நன்கு வெந்து தயாராகி இருக்கும் பொங்கலில் 1 ஸ்பூன் நெய் விட்டு கிளறி சூடாக பரிமாறவும்.

மிகவும் சத்து மிகுந்த சுவையான சிறு தானிய பொங்கல் இது. 
------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Friday, 1 December 2017

இஞ்சி மருத்துவ பயன்கள்



ஞ்சுதல் என்றால் நீரை உள்ளிழுத்தல். நீரை உள்ளிழுப்பதால் இஞ்சி எனும் பெயர் தோன்றிற்று.  இஞ்சி அதன் மருத்துவக் குணத்திற்காக பண்டையகாலத்திலிருந்தே இந்தியா, சீனா, தூர கிழக்கு நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

* இஞ்சி நுரையீரல் சம்பந்தப்பட்ட சளி, இருமல் வியாதிகளை குணப்படுத்துகிறது. 

* இஞ்சி இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதால் பெரும்பாலான இதய நோய்கள் வராமல் நம்மை பாதுகாக்கிறது.

* பித்தம், பித்த வாய்வு, பித்தம் சம்பந்தப்பட்ட நோய் அனைத்தும் வராமல் தடுப்பதுடன் செரிமான கோளாறு, ருசியின்மை, பசியின்மை, வாந்தி, கிறுகிறுப்பு போன்றவைகள் குணமாக்கி உணவுகளை எளிதில் ஜீரணிக்க செய்து விடுகிறது.

* இஞ்சியில் 1 முதல் 4% வரை வோலடைல் எண்ணெய் உள்ளது. இந்த எண்ணெய் இஞ்சியின் மருத்துவக் குணத்திற்கும் வாசனை மற்றும் ருசிக்கும் மூலகாரணமாக உள்ளது. 

* ஜின்ஜிபெரேன், பிசா பொலின் என்று இரண்டு நறுமண பொருட்களும் ஜின்ஜரோல்ஸ்  என்ற காரமான பொருளும் இஞ்சியில் இருப்பதால் வாந்தி வரும் நிலையை தடுக்கிறது. 

* இஞ்சியை பயன்படுத்துவதால் மாதவிடாய்க் கோளாறுகள், மற்றும் ஆண்மை குறைபாடுகளை நிவர்த்தி செய்கிறது.




இஞ்சியை நோய்கள் போக்க பயன்படுத்த வேண்டிய முறைகள்

* சளியை விரட்டும் இஞ்சி: 
இஞ்சியைத் தட்டி தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை இறக்கி வடிகட்டி அதனுடன் தேவைக்கேற்ப பனங்கற்கண்டு சேர்த்து அளவோடு சாப்பிட்டு வந்தால் மார்பில் சேர்ந்திருக்கும் சளி, அஜீரணம் குணமாகும்.

* தலைவலி, தலைபாரம் போக்கும் இஞ்சி: 
முற்றிய இஞ்சியைத் தோல் நீக்கி அரைத்துப் பிழிந்து தெளிய வைத்து இறுத்து சமஅளவு பசும்பால் கலந்து, அக்கலவையுடன் சம அளவு நல்லெண்ணெய் கலந்து சிறு தீயில் பதமாகக் காய்ச்சி வடிகட்டி வாரம் இருமுறை தலை முழுகி வர நீர்க் கோவை, நீர்பீனிசம், தலைவலி, கழுத்து நரம்புப் பிசிவு, தலைப்பாரம், அடுக்குத் தும்மல் நீங்கும்.

* பித்தம் நீங்கிட இஞ்சி காயகல்பம்: 
இஞ்சியை சுத்தம் செய்து மேல்தோல் சீவிப்போட்டு சிறு துண்டுகளாக நறுக்கி 150 கிராம் எடுத்து ஒரு வாயகன்ற கண்ணாடி ஜாடியில் போட்டு சுத்தமான தேனும் 150 கிராம் விட்டு நான்கு நாள் கழித்துத் தினம் காலையில் வெறும் வயிற்றில் ஒரிரண்டு துண்டுகள் தொடர்ந்து 1 மண்டலம் சாப்பிட வேண்டும். இப்படி சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாகி, பித்தம் சாந்தப்பட்டுவிடும். ஆயுள் பெருகும். முகப்பொலிவும் அழகும் உண்டாகும். மனதிடம், நெஞ்சு உரம் பெறும். வேம்பு காயகல்பம் போன்று இதுவும் ஒரு காயகல்பமுறையே!


* செரிமான கோளாறுகள் நீங்கிட: 
நாள் ஒன்றுக்கு 2 முதல் 4 கிராம் இஞ்சிப்பவுடர் உட்கொள்ளவும் (அ) புத்தம் புதிதான இஞ்சித்துண்டு சிறிது எடுத்துக்கொண்டு அதன்மேல் பாறை உப்பு தூவிக்கொண்டு சாப்பாட்டுக்கு முன்பு உட்கொண்டு வர சீரண சக்தியை வலுப்படுத்தும். உணவு நன்றாக செரிமானம் ஆகிவிடும். சுக்கு பவுடர் உடன் திப்பிலி மற்றும் கருமிளகு சேர்த்து உட்கொண்டு வர ஜீரண மண்டல பாதை நன்றாக செயல் பட ஆரம்பிக்கும்.

* பித்தம் போக்கும் இஞ்சி கஷாயம்: 
இஞ்சி கஷாயம் கால் டம்ளர் 20 கிராம் கற்கண்டு தூள் செய்து சேர்த்து அதனுடன் ஒரு எலுமிச்சம்பழம் ரசம் பிழிந்து அரைக்கால் படி பசும்பாலில் கலந்து காலையில் சாப்பிட்டு வர பித்த ரோகங்கள், பித்த சம்பந்தப்பட்ட வாயு, பித்த சம்பந்தப்பட்ட கப நோய்கள் யாவும் விலகிப்போகும். அத்துடன் டயாபடீஸ் என்ற நீரிழிவு சர்க்கரை மூலம் கழிவதை தடுத்து நிறுத்தி, களைப்பு, அதிக பசி, தாகம், வறட்சி, அடிக்கடி சிறுநீர் போவதும் நிற்கும். எரிகுன்மம் ஆஸ்துமா, இளைப்பு, மயக்கம், இருமல் வாய்வு குடைச்சல், வலிகள் நீங்கும் சந்தேகமில்லை.

* ஆஸ்துமா, இருமல் நீங்க:
இஞ்சி 15 கிராம், வெள்ளெருக்கன் பூ 5, மிளகு 10 இவைகளை நசுக்கி இரண்டு குவளை நீர்விட்டுக் காய்ச்சி ஒரு குவளையாக சுண்ட வைத்து வேளை ஒன்றுக்கு அரை குவளையாக குடித்துவர சுவாசகாசம், இரைப்பு, சுவாச இருமலுக்கும், சளி நுரையீரல் அடைத்து வெளியேறாமல் தொல்லை கொடுக்கும்போதும் இந்தக் கஷாயத்தை காலை மாலை நோய் தீரும் வரை கொடுக்கலாம். (இதில் பூ மூன்றும் மிளகு 10 மட்டும்தான்; எடைகணக்கல்ல)

* பிரயாண களைப்பு வராமல் தடுக்க:
சுக்குப்பவுடர் 1 கிராம் பிரயாணம் செய்வதற்கு 30 நிமிடத்திற்கு முன்பு உட்கொள்ள வேண்டும். 

* ஆண்மை குறைவு நீங்க: 
ஆண்களுக்கு கோழி அல்லது ஆட்டு இறைச்சி சூப்பில் அல்லது ஆப்பாயில் முட்டையில் சுக்குப்பொடி சேர்த்துக்கொள்ள ஆண்மைக்குறைவு, விந்து முந்துதல் பிரச்சனைகள் குணமாகும்.

* இஞ்சி முரப்பா: 
இஞ்சியைப் பக்குவம் செய்து சர்க்கரைப் பாகுடன் பதப்படுத்தி தயாரிக்கபடுவது இஞ்சி முரப்பா. இது நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். இதனால் வயிற்று உப்புசம், புளியேப்பம், வாந்தி, குடல் கோளாறு, கப நோயால் மார்பில் சளி சேர்ந்து இரைப்பு நோய் தொல்லை வரும்போது மிக்க பயன் தரும். இஞ்சி முரப்பா தின்பதற்கும் ருசியாக இருக்கும்.

* மாதவிடாய் கோளாறுகள் நீங்கிட: 
புதிய இஞ்சியை நசுக்கி தண்ணீரில் சேர்த்து ஒரு சில நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். சர்க்கரை இத்துடன் சேர்த்து சாப்பாட்டுக்குப் பின்பு தினசரி 3 வேளை அருந்தி வரவும். மாதவிடாய்வலி, ஒழுங்கற்ற மாதவிடாய் காலங்கள் குணமாகும்.
------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Thursday, 23 November 2017

நோய்கள் விரட்டும் கடல் பாசி - சுருள் பாசி - ஸ்பைருலினா

யற்கை அன்னை நமக்கு அளித்திருக்கும் அற்புதமான கொடைகளில் ஒன்று தான் கடல்பாசி (அகார் அகார்),  500 மில்லிகிராம் கடற்பாசியில் ஒரு கிலோ காய்கறியில் உள்ள சத்துக்கள் அடங்கியுள்ளது.  அதிக புரதச்சத்தும், வைட்டமின்களும் கொண்ட கடற்பாசியில் அதிக மருத்துவ குணங்களும் உள்ளது. விண்வெளிக்கு ராக்கெட்டில் செல்லும் விண்வெளி வீரர்களுக்கு உணவாக கடல்பாசி மாத்திரைகள் கொடுக்கபடுகின்றது.



பாக்கெட்டில் கிடைக்கும் கடற்பாசி தூளை எலுமிச்சை பழச்சாறுடன் கலந்து குடிக்கலாம், ரோஸ் மில்க், பாதாம் மில்க், ஜிகர்தண்டா போன்ற குளிர்பானங்களிலும் கலந்து குடிக்கலாம். இந்த கடற்பாசியை உணவில் சேர்த்து கொள்வதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. புற்று நோய், நீரிழிவு நோய், காச நோய் போன்ற கொடிய நோய்கள் அண்ட விடாமல் தடுக்கிறது கடற்பாசி. 


சேமியா வடிவில் கிடைக்கும் கடற்பாசி (சைனா கிராஸ்) கொண்டு செய்யப்படும் ஒரு இனிப்பு வகை செய்முறை


ஸ்பைருலினா என்று அழைக்கப்படும் கடற்பாசி மாத்திரை வடிவில் கிடைக்கிறது. பெரியவர்கள் ஒரு நாளைக்கு 2 கிராம் அளவு கடற்பாசி மாத்திரை எடுத்து கொள்ளலாம். சிறு பிள்ளைகள் ஒரு நாளைக்கு அரை கிராம் அளவு கடற்பாசி மாத்திரை எடுத்து கொள்ளலாம். கடற்பாசியில் வைட்டமின் பி12  சத்து அதிகமாக உள்ளது. வைட்டமின் பி12  இரத்த சோகையை நீக்கும். மனிதர்களுக்கு மட்டுமல்ல மாடுகள், மீன்களுக்கு தயாரிக்கப்படும் கால்நடை தீவனங்களில் கடற்பாசி கலக்கபடுகிறது, இதனால் மாடுகள் அதிகமாக பால் கொடுக்கின்றன, மீன்கள் வேகமாக வளர்கின்றன. கடற்பாசி இயற்கை உணவகங்களில் விற்பனையாகி வருகிறது.   

சுருள் பாசி - ஸ்பைருலினா மருத்துவ குணங்கள் விளக்கும் காணொளி காட்சி 

------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Thursday, 16 November 2017

பூண்டு மருத்துவ குணங்கள்



நாம் அன்றாடம் சமைக்கும் சமையலில் இடம்பெறும் பூண்டின் மருத்துவ குணங்களை இன்று நாம் தெரிந்து கொள்ளலாம். தினமும் உணவில் பூண்டு சேர்த்து வந்தால் இருமல், காய்ச்சல் போன்ற நோய்கள் அண்டுவதில்லை.  வெங்காய குடும்ப வகையை சேர்ந்த, இயற்கையாக கிடைக்கும் இந்த பூண்டு, நமக்கு தரும் மருத்துவ பயன்கள் அளவிட முடியாதவை. பூண்டு அதிக அளவில் விளைவது சீனாவில் தான், பூண்டு உற்பத்தியில் சீனாவுக்கு அடுத்த இடத்தில இந்தியா உள்ளது. 

பூண்டில் உள்ள அலிசின் என்ற ஆன்டிஆக்சிடண்ட் சத்து, நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. வாய்வு கோளாறு, அஜீரண கோளாறுகளை நீக்குவதில் பூண்டுக்கு இணையான வேறு மருந்தில்லை பூண்டை உணவில் தொடர்ந்து பயன்படுத்துபவர்களுக்கு இரத்த அழுத்த நோய் வருவதில்லை. தொண்டை கரகரப்பு, பல் வலி போன்றவை நீங்க பூண்டு மிக சிறந்த மருந்தாகும். நம் உடலில் உள்ள இரத்தக் குழாய்களில் படிந்திருக்கும் தேவையற்ற கெட்ட கொழுப்பை அகற்றி, சீரான இரத்த ஓட்டம் தந்து, மாரடைப்பில் இருந்து நம்மை காப்பதில் பூண்டு பெரும் பங்கு வகிக்கிறது. 

இவ்வளவு மருத்துவ குணங்கள் கொண்ட பூண்டை பச்சையாக சாப்பிடுவது நல்லது, ஆனால் பூண்டு சாப்பிட்டால் வரும் வாசம் காரணமாக பலர் பூண்டை பச்சையாக சாப்பிடுவதில்லை. பூண்டை பச்சையாக சாப்பிட்டு விட்டு பின்பு சிறிது புதினா இலைகளை மென்று தின்றால் பூண்டு வாசம் போய் விடும். 

பூண்டு பால்:
காச நோயினால் அவதிபடுபவர்கள் ஒரு டம்ளர் பாலில், ஒரு முழுப்பூண்டின் உரித்த பற்கள், பத்து மிளகு, சிறிது மஞ்சள் தூள், இவற்றுடன் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து இந்த கலவையை  அடுப்பில் வைத்து ஒரு டம்ளராக வரும் வரை காய்ச்சி எடுத்து குடித்து வர சளி, இருமல் நீங்கும். நோய் குணமானவுடன் பூண்டு பால் குடிப்பதை நிறுத்தி விட வேண்டும். 

பூண்டின் மருத்துவ குணங்கள் விளக்கும் காணொளி காட்சி 

Thursday, 9 November 2017

சக்கரை நோய் கட்டுக்குள் கொண்டு வர...

நீரிழிவு நோய் ஏன் வருகிறது:
நம் உடலில் பாயும் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைச் சரியாக வைத்திருக்க உதவுவது இன்சுலின். நம் வயிற்றிலிருக்கும் கணையம் என்ற உறுப்பு தான் ரத்தத்தில் சக்கரையை கட்டுக்குள் வைத்திருக்கும் இன்சுலினை சுரக்கிறது, இந்த கணையம் சரியாக செயல்படாமல் போவதால் இன்சுலின் சுரப்பு பாதிக்கபடுகிறது.  இன்சுலின் சரியாக சுரக்காமல் போனால்   ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகமாகி விடுகிறது. இப்படிப்பட்ட நிலையைத் தான் நீரிழிவு அல்லது டயாபடீஸ் என்று குறிப்பிடுகிறோம்.

ரத்தத்தில் இயல்பாக இருக்க வேண்டிய சக்கரையின் அளவும், நீரிழிவு நோய் வந்தவர்களுக்கு இருக்கும் சக்கரையின் அளவும் எடுத்துக்காட்டும் புகைப்படம்:


பாதிப்புகள்:


நீரிழிவு நோயினால் அதிகம் பாதிக்கபடுவது இரத்தக்குழாய்கள் தான். இரத்தக்குழாய்கள் பாதிக்கப்படுவதால் கண்கள், சிறுநீரகங்கள், இதயம், பாதங்கள் ஆகிய உறுப்புகள் அதிக அளவு  நீரிழிவு நோயினால் பாதிக்கப்படுகின்றன. 

மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற்று சரியான ‘‘உணவுக் கட்டுப்பாடு’’ முறையை பின்பற்றுவதன் மூலமும், (ரத்தத்தில் உள்ள சக்கரையின் அளவை பொறுத்து ஒவ்வொருவருக்கும் இந்த உணவு கட்டுப்பாடு முறை மாறும்) நடை பயிற்சி மேற்கொள்வதன் மூலமும் இந்த நோயை கட்டுக்குள் கொண்டு வரலாம். சக்கரை நோயை கட்டுக்குள் கொண்டு வர சில எளிய உணவு பழக்கங்கள் - விளக்கும் காணொளி காட்சிகள்.


சக்கரை நோய் முழுமையாக குணமடைய 

------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Thursday, 2 November 2017

புற்று நோய் தடுக்கும் சோற்று கற்றாளை

புற்று நோய் தடுக்கும் சோற்று கற்றாளை புற்று நோயை முற்றிலும் அழிக்க, வராமல் தடுக்க ஒரு சிறந்த கை மருந்து ...!! புற்று நோய் வந்து விட்டது என்றாலே சகல சப்த நாடிகளும் ஒடுங்கிப்போய் தளர்ந்து விடுவார்கள். அருகில் இருந்து பார்த்தவர்களுக்குத் தான் தெரியும், சிங்கம் போலே சிலுப்பிக் கொண்டு இருந்த பலரை, வேரோடு சாய்த்து விடும் தன்மை. இந்த புற்று நோய்க்கு உண்டு.



இப்போது ஓரளவுக்கு மருத்துவ உலகம் சில மருந்துகளை கண்டு பிடித்து, குணப் படுத்த நடவடிக்கை எடுத்தாலும், பணம் இருப்பவர்கள் மட்டுமே அந்த சிகிச்சை மேற்கொள்ள முடியும். ஆனால் அந்த வேதனை, ரணம் உயிரை விட்டு விடுவதே மேல் என்றே தோன்றி விடும். எனக்கு தெரிந்து, மிக நெருக்கமான வட்டத்தில் – மூன்று பேரை, அவர்கள் ஒட்டு மொத்த சொத்தையும் செலவழித்துப் பார்த்தும், உயிரையே காவு வாங்கி விட்டது. அதை விட கொடூரமாக வேறு எந்த நோயின் வீரியத்தையும் கண் முன்னே நான் பார்த்ததில்லை. அப்படிப்பட்ட புற்று நோயை , படிப்படியாக முற்றிலும் குணப்படுத்த ஒரு எளிய வைத்தியம் இது.

 இந்த சிகிச்சையை கண்டு பிடித்தவர் பிரேசில் நாட்டில் பிறந்தவரும் சிறந்த மருத்துவரும் பாதிரியாருமாகிய Fr ரோமனோ சகோ (Fr Romano Zago) என்பவர். இவர் கண்டு பிடித்த இம்மருந்தை புற்று நோயால் மிக கடுமையாக பாதிக்கப் பட்டவர்கள்கூட உபயோகித்து குணமடைந்துள்ளனர். 

இனி இம்மருந்தை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம். இதில் பயன்படுத்தப்படும் மூலிகை எங்கும் எளிதாக கிடைக்கும் சோற்று கற்றாழை ஆகும் . 

தேவையான பொருட்கள்: 

சோற்று கற்றாழை:  400 கிராம் 
சுத்தமான தேன்:  500 கிராம் 
whisky (or) brandy:  50 மில்லி (மருந்தாக மட்டும் பயன்படுத்துக) 

தயாரிப்பு முறை:

சோற்றுக் கற்றாழையை எடுத்து பக்கவாட்டில் உள்ள முட்களை நீக்கி கொள்ள வேண்டும். தோலை நீக்கி விடக்கூடாது. தோலை சுத்தமான துணியினால் துடைத்துக் கொள்ளவேண்டும். அடுத்த படியாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறியதாக கற்றாழையை நறுக்கிக் கொள்ளவேண்டும். நறுக்கப்பட்ட துண்டுகளை ஒரு பாத்திரத்தில் கொட்டி தேன் மற்றும் whisky (or) brandy யுடன் சேர்த்து ஒரு கரண்டியால் நன்றாக கலக்க வேண்டும். இப்போது மருந்து தயாராகி விட்டது. 

 மருந்தை உட்கொள்ளும் விதம்: 

இம்மருந்தை தினமும் மூன்று வேளை உணவு அருந்துவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பு 15 ml வீதம் உண்ணவேண்டும். ஒவ்வொரு முறை பயன்படுத்தும் போதும் மருந்தை நன்றாக குலுக்கிக் கொள்ளவேண்டும. 

மேலே சொன்ன அளவில் செய்தால் பத்து நாட்களுக்கு இந்த மருந்து வரும். மருந்து தீர்ந்தவுடன் 10 நாள் கழித்து மீண்டும் தயாரித்து உண்ண வேண்டும். பத்து நாட்களுக்கு மேல் மருந்தை storage செய்ய கூடாது. 

இடையிடையே மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு நோய் நன்கு குணமாகும் வரை மருந்தை உட்கொள்ள வேண்டும். சிலருக்கு மிக குறுகிய காலத்திலேயே இதன் மூலம் நிவாரணம் கிடைத்துள்ளது . இது மிகவும் எளிதான சக்தி மிகுந்த மருந்து ஆகும். மருந்தை குளிர்சாதன பெட்டியிலோ அல்லது அதிக வெப்பம் இல்லாத இடங்களிலோ காற்று புகாத பாட்டிலில் வைத்திருப்பது நல்லது .          நன்றி - வாட்ஸ் ஆப்  நண்பர்கள் குழு

சோற்று கற்றாளை - மருத்துவ குணங்கள்



சோற்று கற்றாளை சாறு செய்முறை

------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்