இங்கிலாந்தை சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர் இதய மாற்று அறுவை சிகிச்சையில் பன்றியின் இதயத்தை மனிதனுக்கு வைக்கும் ஆராய்ச்சியில் இறங்கியுள்ளார். இந்த ஆராய்ச்சி வெற்றியடையும் பட்சத்தில் இன்னும் மூன்று ஆண்டுகளில் பன்றியின் இதயத்தை இதய மாற்று அறுவை சிகிச்சை மூலம் இதயம் பழுதடைந்த மனிதனுக்கு வைத்து மனிதனின் ஆயுள் காலத்தை நீடிக்க முடியும்.
இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டு வரும் ஓய்வு பெற்ற இதய அறுவை சிகிச்சை நிபுணரான சர் டெரன்ஸ் இங்கிலிஷ் (87 வயது) 1979ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், பிரிட்டனில் வெற்றிகரமாக முதல் இதய மாற்று அறுவை சிகிச்சையை செய்த பெருமைக்குரியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது பன்றியின் சிறுநீரகத்தை மனிதனின் பழுதடைந்த சிறுநீரகத்திற்கு பதிலாக வைக்கும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை ஆராய்ச்சியை நடத்தி வரும் இவர் இந்த ஆராய்ச்சி வெற்றியடைந்தால் இதே முறையில் பன்றியின் இதயத்தை மனிதனுக்கு வைக்கும் இதய மாற்று அறுவை சிகிச்சையும் வெற்றியடையும் என்று கருதுகிறார். இவர் கடந்த நாற்பது வருடங்களாக வெற்றிகரமான இதய மாற்று அறுவை சிகிச்சை நிபுணராக உள்ளார்.
இதய மாற்று அறுவை சிகிச்சையில் பெரும் புரட்சியை எற்படுத்தக்கூடிய இவருடைய ஆராய்ச்சி வெற்றியடையும் பட்சத்தில் இதயம் சம்பந்தப்பட்ட பல்வேறு நோய்களுக்கு தீர்வு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
இங்கிலாந்து நாட்டில் மட்டும் இதய மாற்று அறுவை சிகிச்சையில் - மாற்று இதயத்துக்காக 280 நோயாளிகள் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். இந்த ஆராய்ச்சியின் மூலம் பழுதடைந்த இதயங்களால் இருண்டு கிடக்கும் அவர்களின் வாழ்க்கையில் ஒரு விடிவுகாலம் வரும் என்று நம்பப்படுகிறது.
------------------------------------
முந்தைய பதிவுகள்
சமூக ஊடகங்களில் பின் தொடர
----------------------------------------